Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

போலி களைநாசினிகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

அக்டோபர் 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

போலி களைநாசினிகளின் ஊடுருவல்கள் அதிகரித்துள்ளதால் நெற்செய்கை விளைச்சல் வீழ்ச்சியடைந்து விவசாயிகள் பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்கி வருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, நெல் விளைச்சலில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் போலி களைநாசினிகளைக் கட்டுப்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மருந்தகங்களில் போலி மருந்துகளை ஆய்வு செய்து கட்டுப்படுத்தும் பொறிமுறையைப் போல, நெற்செய்கையில் பயன்படுத்துவதற்காக கடைகளில் விற்கப்படும் களைநாசினிகளையும் ஆய்வுசெய்து கட்டுப்படுத்தும் பொறிமுறை இலங்கையில் மேலும் முறைப்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

விவசாயிகள் விலைக்கு வாங்கிப் பயன்படுத்தும் களைநாசினிகளிலும் போலி களைநாசினிகளின் கலப்படம் இருப்பதால், நெற்செய்கையின் விளைச்சலும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் முறையிடுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதனைக் கருத்திற்கொண்டு, இவ்வாறான போலி மருந்துகளின் கட்டுப்பாடு தொடர்பில் அரசு தகுந்த பொறிமுறை ஒன்றை வகுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேட்டுக்கொண்டார்.

முந்தைய செய்தி தமிழக மீனவர் தொடர்பில் இந்திய உச்சநீதிமன்றத்தின் கருத்து வரவேற்புக்குரியது: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
அடுத்த செய்தி வடக்கில் கடந்த 10 ஆண்டுகளில் 86,302 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு

ஆகஸ்ட் 5, 2026
இலங்கை

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள்!

நவம்பர் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி மூன்று நாட்கள்அணைய விளக்கு போராட்டம் !

ஜூன் 21, 2025
1
இலங்கை

நெடுந்தீவில் பாடசாலை நேரத்தை மாற்ற ஆராய்வு

மார்ச் 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?