Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மயிலத்தமடு–மாதவனை பண்ணையாளர்களின் போராட்டம் தீர்வின்றி தொடர்வதாக குற்றச்சாட்டு

அக்டோபர் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பண்ணையாளர்கள் முன்னெடுத்து வரும் உரிமைப் போராட்டம் 1,500 நாட்களுக்கும் மேலாகியும் எந்தவிதமான தீர்வும் இன்றி தொடர்வதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஊடக அறிக்கையில், பண்ணையாளர்களின் நியாயமான கோரிக்கைகள் பல்வேறு விஷமிகளாலும், சில சுயநலப் போக்காளர்களாலும் கையாளப்பட்டு மலினப்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எந்தவொரு பிரதேச செயலகப் பிரிவிலும் ‘திபுலபொத்தானை’ என்ற கிராமம் இல்லை எனத் தெரிவித்துள்ள அவர், தற்போது பெரியமாதவனைப் பகுதி ‘திபுலபொத்தானை’ என அழைக்கப்பட்டு ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பல நூற்றாண்டுகளாக மேய்ச்சல் தரையாகப் பயன்படுத்தப்பட்டு வந்த மயிலத்தமடு–மாதவனை பகுதிகள், தற்போது சேனைப் பயிர்ச்செய்கைக்காக ஆக்கிரமிக்கப்பட்டு பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அப்பகுதியில் மேய்ச்சலில் ஈடுபடும் கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, மாடுகளை அங்கு மேயவிடாமல் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

‘நல்லிணக்கம்’ என்ற பெயரில் இருதரப்பினரையும் ஒரே மேய்ச்சல் தரையைப் பயன்படுத்த அனுமதிப்பது, உண்மையில் பண்ணையாளர்களை அப்பகுதியிலிருந்து படிப்படியாகவும் முழுமையாகவும் வெளியேற்றுவதற்கான திட்டமாக அமையக்கூடும் எனவும் தர்மலிங்கம் சுரேஷ் எச்சரித்துள்ளார்.

இந்த நிலை தொடருமானால், இன்னும் சில வருடங்களில் கால்நடை வளம் முற்றாக அழிந்துபோகும் அபாயம் ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரித்த நாடுகள் பட்டியலில் இலங்கை
அடுத்த செய்தி கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலய நடை பவனி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

20 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை விரைவில் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

மே 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு – சிறிதரன் ஆதரவு

பிப்ரவரி 3, 2026
இலங்கை

பிரதமர் கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு விஜயம்.

பிப்ரவரி 16, 2025
இலங்கை

தேசிய மக்கள் சக்தியின் அலுவலகம் திறப்பு.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?