Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோருக்கு அரச வேலை வாய்ப்பு

அக்டோபர் 4, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

அரசுத் துறைக்கு ஒரு இலட்சத்து பன்னிரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்களை புதிதாக இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்றைய தினம்  இடம்பெற்ற தொழிற்சந்தையில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நாடளாவிய ரீதியில் தொழில் வாய்ப்பின்மையை எடுத்துக்கொண்டால், அது சுமார் 3.4 சதவீதமாகக் காணப்படுகின்றது. ஆனால், யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அது சுமார் 6.7 சதவீதமாக உள்ளது.

எனவே, யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த எமது இளைஞர், யுவதிகளுக்கு மேலும் அதிகளவிலான தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய பாரிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது.

தொழில் வாய்ப்பின்மை என்பது வெறுமனே ஒரு புள்ளிவிவரம் அல்ல. அது ஒரு இளைஞனின் கனவு, ஒரு யுவதியின் எதிர்காலம், ஒரு குடும்பத்தின் எதிர்பார்ப்பு.

அதேவேளை, தொழிலாளர் பங்கேற்பைப் பார்க்கும்போது, ஆண்களில் சுமார் 68 சதவீதத்தினர் தொழிலில் ஈடுபட்டுள்ள நிலையில், பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு சுமார் 32 சதவீதமாகவே காணப்படுகின்றது.

எனவே, பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பதும், அவர்களின் திறமைகளையும் ஆற்றல்களையும் பொருளாதார வளமாக மாற்றுவதும் எமது சமூகத்தின் முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியமானதாகும்.

தொழில் வாய்ப்பின்றி இருக்கின்றவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், தொழில் தேடுபவர்களையும் தொழில் வழங்குபவர்களையும் ஒரே தளத்தில் இணைக்கும் பாலமாக இன்றைய தொழிற்சந்தை அமைகின்றது.

இந்த நாட்டில் வாழ்கின்ற எந்தவொரு இளைஞரும், யுவதியும் தொழில் வாய்ப்பின்றி இருக்கக்கூடாது.

ஒவ்வொருவருக்கும் அவர்களின் கல்வித் தகுதிக்கும், திறமைக்கும், ஆற்றலுக்கும் பொருத்தமான தொழில் வாய்ப்பு கிடைக்க வேண்டும். ஒவ்வொருவரும் பொருளாதார ரீதியாக வலுவடைந்து, கௌரவத்துடனும் சுயமரியாதையுடனும் வாழக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

அரசுத் துறைக்கு ஒரு இலட்சத்து பன்னிரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்களை புதிதாக இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகளற்ற நிர்வாகத்தை உருவாக்குவதுடன், அரச வளங்களை சிக்கனமாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய கொள்கையாக உள்ளது என மேலும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி யாழில் மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது
அடுத்த செய்தி இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு உயிரிழப்புகள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

வவுனியாவில் மரக்கறிகள் கழிவுகள் நிறைந்த வவுனியா குளத்தில் கழுவி விற்பனை!

பிப்ரவரி 3, 2025
இலங்கை

குளவிகொட்டுக்கு இலக்கான 25 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

அக்டோபர் 14, 2025
இலங்கை

தையிட்டி விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு தேசிய மக்கள் சக்தியினர் எதிர்ப்பு!

டிசம்பர் 19, 2025
இலங்கை

வடக்கு அபிவிருத்திக்கு ஜப்பான் தொடர்ந்து உதவ வேண்டும்.

பிப்ரவரி 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?