Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

பிரான்ஸில் மாணவர்கள் போராட்டம்: பொலிஸ் எச்சரிக்கை

அக்டோபர் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரான்ஸ் முழுவதும் பரவியுள்ள மாணவர்கள் போராட்டம் தற்போது “கட்டுப்பாட்டை மீறி” சென்றுள்ளதாக பாரிஸ் பொலிஸ் தலைமை அதிகாரி சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

வன்முறை மற்றும் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தும் செயல்களுக்கு எதிராக அதிகாரிகள் கடுமையாக நடவடிக்கை எடுப்பார்கள் என எச்சரித்துள்ள அவர், ஆர்ப்பாட்டக்காரர்களை அமைதியான வழிமுறைகளுக்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

வகுப்பறை நிலவரங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பில் அதிகரித்துவரும் வன்முறைப் போராட்டங்களைக் கட்டுப்படுத்த அதிபர் இம்மானுவேல் மெக்ரோனின் அரசாங்கம் திணறி வருகிறது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிரான்ஸ் முழுவதும் கலகத் தடுப்புப் பொலிஸாரும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் மோதிக்கொண்டதுடன், ஆசிரியர்களை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

கடந்த திங்கட்கிழமை முதல் நாடு முழுவதும் பெரும்பாலும் பதின்ம வயதினரான சுமார் 5,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பலரும் காயமடைந்துள்ளனர்.

போராட்டங்களின்போது 600க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக தேசிய பொலிஸ் பேச்சாளர் ஆகாத் புகோ (Agathe Foucault) தெரிவித்துள்ளார்.

மேலும் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதுடன், சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் பல மில்லியன் யூரோக்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இயக்கத்தைத் தொடங்கியவர்கள் தற்போது அதனைக் கட்டுப்படுத்தவில்லை என்றும், பாடசாலை முற்றுகைகள் மற்றும் கலவரங்களைக் கைவிட்டு அமைதியான முறையில் போராடுமாறும் பாரிஸ் பொலிஸ் தலைமை அதிகாரி பட்ரிஸ் போரே (Patrice Faure) மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தொழில்முறை கலவரக்காரர்களின் செல்வாக்கிலிருந்து பிள்ளைகளை விலக்கி வைக்கும் பொறுப்பு பெற்றோர்களுக்கும் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் மாணவர் சங்கங்கள் செவ்வாய்க்கிழமை தேசிய அளவிலான ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

வகுப்பறைகளில் அதிக ஜனநெரிசல், ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பழுதடைந்த கட்டிடங்கள் குறித்து மாணவர்கள் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை பாரிஸ் நகரின் மையப்பகுதியில் திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் மேலும் வன்முறைகள் வெடிக்கலாம் என பாதுகாப்பு அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

முந்தைய செய்தி ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் தீவிரமாக்கப்படும்: ஸெலென்ஸ்கி எச்சரிக்கை
அடுத்த செய்தி யாழில். புகையிரத பாதையில் படுத்திருந்து பாடல் கேட்டவரின் கை கால்கள் துண்டிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

காசா அமைதித் திட்டம்: ஜாரெட் குஷ்னர் – நெதன்யாகு இடையே முக்கியப் பேச்சுவார்த்தை

ஆகஸ்ட் 17, 2026
உலகம்

நைஜீரியா முழுவதும் மின்தடை – மக்கள் அவதி!

நவம்பர் 8, 2024
உலகம்

அமெரிக்காவில் மலையேற்றம் சென்ற இந்திய வம்சாவளி மாணவர் உயிரிழப்பு

ஆகஸ்ட் 8, 2026
உலகம்

செக் குடியரசில் ரயில் விபத்து

நவம்பர் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?