Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கீரிமலையில் அகற்றப்பட்ட ஆபத்தான மருத்துவக் கழிவுகள்

செப்டம்பர் 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கீரிமலையில் கொட்டப்பட்டிருந்த ஆபத்தான மருத்துவக் கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் செயலாளர் அறிவித்துள்ளார்.

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட கீரிமலையில் கொட்டப்பட்டிருந்த ஆபத்தான மருத்துவக் கழிவுகளை உடனடியாக அகற்றுமாறு வடக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலைத் தொடர்ந்து, குறித்த மருத்துவக் கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவித்துள்ளார்.

கீரிமலையில் ஆபத்தான மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதுடன், அது தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகியிருந்தன.

இதனையடுத்து, வடக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தால் நேற்றைய தினம் சனிக்கிழமை, குறித்த பகுதியில் கொட்டப்பட்டிருந்த ஆபத்தான மருத்துவக் கழிவுகளை அன்றைய தினத்துக்குள் அகற்றுமாறும், அவை தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் வலிகாமம் வடக்கு பிரதேச சபையிடம் கோரப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, குறித்த பகுதியில் கொட்டப்பட்டிருந்த மருத்துவக் கழிவுகள் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டுள்ளதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவித்துள்ளார்.

சுகாதாரத் துறை சார்ந்த கழிவுகளை முறையற்ற வகையில் கையாளுதல் என்பது பொதுச் சுகாதாரத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதால், அவற்றை முறையான வகையில் சேகரித்து, பிரித்து, பாதுகாப்பாகக் கையாள்வதும் இறுதியாக உரிய முறையில் அகற்றுவதும் அவசியமானதாகும்.

இலங்கை சுகாதார அமைச்சின் தேசிய சுகாதாரக் கழிவு முகாமைத்துவத் திட்டமும், சுகாதாரக் கழிவுகளை முறையாகக் கையாளாதது நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் குறிப்பிடுவதுடன், கழிவுகளைப் பிரித்தல், பொதியிடுதல், கையாளுதல், சேமித்தல், சிகிச்சையளித்தல் மற்றும் அகற்றுதல் ஆகியவை முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது.

மேலும், சுகாதார நிலையங்களால் உருவாக்கப்படும் மருத்துவக் கழிவுகள் இறுதி அகற்றல் வரை முறையாக நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதும் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி யாழில் திடீர் மின்சார விநியோக தடை
அடுத்த செய்தி யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தெல்லிப்பழை வைத்தியர் தொடர்பில் அவதூறு பரப்பிய குற்றச்சாட்டு – அருச்சுனாவிற்கு பிணையில்

ஏப்ரல் 24, 2026
அண்மைய செய்திகள்உலகம்

கனடிய சந்தையில் இருந்து மீளப் பெறப்படும் உணவு பொருள்.

செப்டம்பர் 15, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

பலாலி பொதுநோக்கு மண்டபத்தில் இருந்த குடிநீர் தாங்கியை அகற்றிய பொலிஸார்

ஜூலை 20, 2026
இலங்கை

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 90 கோடி அமெரிக்க டொலர் நிதியுதவி.

பிப்ரவரி 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?