Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

டொரண்டோ முதலீட்டு உச்சிமாநாட்டுக்கு எதிராக போராட்டம்!

செப்டம்பர் 15, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

கனடாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக 1 ட்ரில்லியன் டொலர் சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான மத்திய அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள கனடா முதலீட்டு உச்சிமாநாடு டொரண்டோவில் ஆரம்பமானது.

உலகின் முன்னணி நிதி அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பங்கேற்றுள்ள இந்நிகழ்வுக்கு எதிராக ஆயிரக்கணக்கான சூழலியல் ஆர்வலர்கள்,தொழிற்சங்கங்கள் மற்றும் பழங்குடியின அமைப்பினர் பேரணிகளையும் போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் இறக்குமதி வரி அச்சுறுத்தல்கள் மற்றும் வர்த்தக நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் சுதேசிய உற்பத்தித் துறைகளை வலுப்படுத்துவதற்காகவே சர்வதேச மூலதனத்தை கார்னி ஈர்க்க முயன்று
வருகிறார்.

உச்சிமாநாடு நடைபெற்று வரும் கலைக்கூடத்திற்கு (Art Gallery of Ontario) வெளியிலும் டொரண்டோ நகர மண்டபத்திற்கு முன்பாகவும் திரண்ட நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், அரசின் இந்த நடவடிக்கை கனடாவின் பொதுச் சொத்துகளையும் இயற்கை வளங்களையும் வெளிநாட்டுப் பெருநிறுவனங்களுக்குக் தாரைவார்க்கும் முயற்சி எனப்
பலத்த கோஷங்களை எழுப்பினர்.

சுமார் 100 க்கும் மேற்பட்ட உலகளாவிய நிதி நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டுள்ள இக்கூட்டத்தில், நாட்டின் அத்தியாவசிய பொதுச் சேவைகள் தனியாருக்குத் தாரைவார்க்கப்படும் அபாயம் உள்ளதாகக் புதிய ஜனநாயகக் கட்சி (NDP) மற்றும் சிவில் சமூக அமைப்புகள் குற்றம்
சுமத்தியுள்ளன.

போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியினத் தலைவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து வெளியிடுகையில், தங்களது பாரம்பரிய நிலங்கள் மற்றும் இயற்கை வளங்கள் மீதான உரிமைகளைப் புறக்கணித்துவிட்டு, 167 க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட திட்டங்களுக்கு மத்திய அரசாங்கம் அனுமதியளிக்க முயல்கிறது எனக் கவலை தெரிவித்தனர்.

அத்துடன், வீடற்றோர் பிரச்சினை மற்றும் பொதுத்துறை கட்டமைப்பு பலவீனமடைந்து வரும் வேளையில், பெருநிறுவனங்களுக்கு வரிவிலக்குகளையும் சலுகைகளையும் வழங்குவது மக்கள் நலனுக்கு எதிரானது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் உச்சிமாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மார்க் கார்னி ,உலகளாவிய வர்த்தகப் போர்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கனடா தனது சொந்தக் காலில் நிற்க வேண்டுமாயின், உள்கட்டமைப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்களில் பிரம்மாண்ட முதலீடுகள் அவசியமாகும். நாட்டின் இறையாண்மையைப்
பாதுகாத்துக் கொண்டே இந்த முதலீடுகள் ஈர்க்கப்படும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இம்மாநாடு நடைபெறும் பகுதிகளைச் சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதுடன், டொரண்டோ நகரின் முக்கிய வீதிகளில் போக்குவரத்தும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

கனடாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் யூரேனியம் வாங்க முன்வந்த இந்தியா

பிப்ரவரி 28, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தனியார் காணியில் இருந்து துப்பாக்கிகள் மீட்பு!

ஜூன் 8, 2025
கனடாமுதன்மை செய்தி

லிபரல் கட்சியின் அடுத்த தலைவர் யார்…… சூடு பிடித்துள்ள வேட்பாளர் தெரிவு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி புதைகுழியில் என்புகூட்டுத்தொகுதி அடையாளம்.

ஏப்ரல் 29, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?