Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பம்

செப்டம்பர் 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாடு முழுவதும் விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை இன்று செப்டம்பர் 14ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படுகிறது.

எதிர்வரும் காலங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

நாடு முழுவதும் 62 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

டெங்கு அபாயம் அதிகமாக காணப்படும் பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை கண்டறிந்து அழித்தல், சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருத்தல் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

இந்த விசேட நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக சிறப்பு செயல்பாட்டு நிலையம் ஒன்றும் நிறுவப்படவுள்ளது. பொதுமக்கள் டெங்கு தொடர்பான தங்களது பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுகளை அந்த நிலையத்திற்கு நேரடியாகத் தெரிவிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல் நினோ காலநிலைச் சூழ்நிலையால் டெங்கு பரவும் அபாயம் அதிகரிக்கக்கூடும் என்பதால் முன்கூட்டியே தயாராக வேண்டியது அவசியம் என சுத்தமான இலங்கை செயலகத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் இந்திக கமகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு அலகின் தற்போதைய தகவலின்படி, 2026ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 97,235 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்கக்கூடிய இடங்களை அகற்றி, நுளம்புகள் பெருகுவதற்கான வாய்ப்புகளைத் தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனையைப் பெறுவதும் அவசியம் என சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

முந்தைய செய்தி வெலிக்கடை சிறைக்குள் போதைப்பொருளோடு சென்ற சிறை அதிகாரி கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

நாளை முதல் பேருந்துகளில் பயணச் சீட்டு கட்டாயம் போக்குவரத்து அதிகார சபை தெரிவிப்பு!

செப்டம்பர் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் காச்சலால் குழந்தை உயிரிழப்பு!

ஜூலை 5, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..

ஏப்ரல் 26, 2025
அண்மைய செய்திகள்உலகம்

ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தை கைவிட அமெரிக்காவிடம் சவுதி அரேபியா வலியுறுத்தல்

ஏப்ரல் 16, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?