Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

‘டாப் 10’ பட்டியலில் மாதவனின் ‘ஜி.டி.என்’

செப்டம்பர் 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு, நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் வெளியான ‘ஜி.டி.என்’ திரைப்படம், திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடி தளத்திலும் உலகளவில் பிரம்மாண்ட சாதனை படைத்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 7ஆம் திகதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம், நான்கு வாரங்கள் வெற்றியுடன் ஓடியது.

ஜி.டி. நாயுடுவாக நடிகர் ஆர். மாதவனின் நடிப்பும், காலனித்துவ ஆட்சிக் காலத்தில் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக அவர் எதிர்கொண்ட சவால்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

இதனைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 4ஆம் திகதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பல்வேறு மொழிகளில் இத்திரைப்படம் வெளியானது.

வெளியான ஒரே வாரத்திற்குள் இந்தியாவில் அதிகம் டிரெண்டாகும் திரைப்படங்களின் பட்டியலில் டாப் 2 இடங்களுக்குள் முன்னேறியதுடன், தற்போது நெட்ஃபிளிக்ஸ் உலகளாவிய டாப் 10 திரைப்படங்களின் பட்டியலிலும் அதிகாரப்பூர்வமாக இடம்பிடித்துள்ளது.

குறிப்பாக, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், பாகிஸ்தான் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட பல நாடுகளில் ‘டாப் 5’ தரவரிசைக்குள் இத்திரைப்படம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இப்படத்தில் ஆர். மாதவனுடன் இணைந்து சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

வலுவான கதைக்களம் கொண்ட இந்தியத் திரைப்படங்கள் ஸ்ட்ரீமிங் தளங்கள் மூலம் உலகளாவிய ரசிகர்களை எளிதாகச் சென்றடைய முடியும் என்பதற்கு ‘ஜி.டி.என்’ திரைப்படம் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது என சினிமா வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்: தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு
அடுத்த செய்தி முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்த லே மான்ஸ் கார் பந்தயம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்சினிமா

தக் லைஃப் திரைப்படம் செய்துள்ள வசூல்!

ஜூன் 8, 2025
சினிமா

லோகேஷ் கனகராஜ் நடித்த ‘டிசி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆகஸ்ட் 31, 2026
சினிமா

ஜிதின் லால் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்

பிப்ரவரி 27, 2026
சினிமா

கும்கி-2 திரைபடத்தை வெளியீட தடை!

நவம்பர் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?