Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பா.உ.நாமல் ராஜபக்ஷவிற்கு, வீட்டிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்ள அனுமதி

செப்டம்பர் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு, வீட்டிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்தார்.

எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்ததில் இலஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இதற்கமைய, வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலையில் அவர் தங்கியுள்ள வளாகத்தில் விசேட பாதுகாப்புத் திட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் கூறினார்.

மேலும், அவரைப் பார்ப்பதற்கு நாளொன்றுக்கு மூவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாமல் ராஜபக்ஷவின் தாயாரான ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (07) முற்பகல் வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று நாமல் ராஜபக்ஷவின் நலனை விசாரித்ததாக ‘அத தெரண’ செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவும் இன்று காலை நாமல் ராஜபக்ஷவைப் பார்ப்பதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி திருட்டு கும்பலின் தலைவர் ரணில் – பா.உ.கந்தசாமி பிரபு காட்டம்
அடுத்த செய்தி சீன ராணுவத்தில் மனித உருவ ரோபோக்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

14 இந்திய மீனவர்களின் வழக்கு.

பிப்ரவரி 19, 2025
இலங்கை

வவுனியாவில் குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புலமைப்பரிசில்கள்

ஆகஸ்ட் 2, 2026
இலங்கை

ரயிலுடன் மோதி ஒருவர் பலி

டிசம்பர் 23, 2025
இலங்கை

யாழில் முன்பகை காரணமாக நடந்த கொடூரக் கொலை!

செப்டம்பர் 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?