Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வவுனியாவில் இடைத்தரகர்கள் இன்றி நெல் கொள்முதல் செய்ய வட்டி இல்லா கடன் வழங்கி வைப்பு.

செப்டம்பர் 4, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE
தற்போதைய சிறுபோகத்தில் விவசாயிகளின் நெல் அறுவடைகளை எந்தவித தடையுமின்றி நியாயமான விலையில் கொள்முதல் செய்யும் திட்டத்திற்கு அமைவாக, வவுனியா மாவட்டத்தின் சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு காசோலைகளை வழங்கும் நிகழ்வு கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில்  இடம்பெற்றிருந்தது.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் அறுவடைக்கு அரசாங்கத்தின் நிலையான விலையை உறுதிசெய்வதையும், சிறு அரிசி ஆலை உரிமையாளர்களை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்முதல் செய்வதற்காக சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு வட்டி இல்லாத கடன் வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இக்கடன் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்திற்காக 109 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அதன் முதற்கட்டமாக 50 மில்லியன் ரூபாய் நிதி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, வவுனியா மாவட்டத்தின் ஆறு சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் இதுவரை இந்த நிவாரணக் கடன் வசதிக்கு விண்ணப்பித்துள்ளதுடன், அவர்களுக்கு நெல் கொள்முதல் செய்வதற்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது, ஒரு அரிசி ஆலை உரிமையாளருக்கு 20.5 மில்லியன் ரூபாய் வரை நிதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இத்திட்டத்தின் மூலம் இம்முறை சிறுபோகத்தில் 830 மெட்ரிக் தொன் நெல் கொள்முதல் செய்யப்படவுள்ளது.
நாடு மற்றும் சிவப்பு நாடு நெல் கிலோவொன்று 120 ரூபாவிற்கும், சம்பா நெல் கிலோவொன்று 130 ரூபாவிற்கும் என்ற அரசாங்கத்தின் நிலையான விலைகளின் கீழ் கொள்முதல் செய்யுமாறு அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த சிறுபோகத்திலும் அரசாங்கத்தினால் 1,800 மெட்ரிக் தொன் நெல் கொள்முதல் செய்யப்பட்டதுடன், 2026 ஆம் ஆண்டில் வவுனியா மாவட்டத்திலிருந்து மட்டும் மொத்தமாக 2,500 மெட்ரிக் தொன் நெல்லைக் கொள்முதல் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த நிவாரணக் கடன் திட்டத்தின் மூலம் வவுனியா மாவட்ட விவசாயிகள் தமது நெல் அறுவடைக்குரிய சரியான விலையைப் பெற்றுக்கொள்ள முடிவதுடன், அரிசி மாஃபியாக்களின்றி நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை விநியோகிக்கவும் வழிவகை செய்யும்.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி. ஏ. சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் என். கமலதாசன், சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள், அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
முந்தைய செய்தி மொண்ட்ரியல் பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
அடுத்த செய்தி எயார்பஸ் ஊழல் விவகாரம்: நாமல் ராஜபக்ஷ செப்டம்பர் 18 வரை விளக்கமறியலில்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

துறைமுகத்தை பார்வையிட்ட சிவில் விமான போக்குவரத்து அமைச்சர்

பிப்ரவரி 20, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வித்யா கொலை வழக்கு குற்றவாளிகளின் மேன்முறையீட்டுக்கான திகதி அறிவிப்பு!

ஆகஸ்ட் 25, 2025
Uncategorizedஇலங்கை

யாழில்.ஜனாதிபதியின் போதை ஒழிப்பு நிகழ்வுக்கு 70 பேருந்துகளில் ஆட்கள்(Video)

ஜனவரி 16, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணியில் மொத்தம் இதுவரையில் 101 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

ஜூலை 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?