Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்!

செப்டம்பர் 3, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

வவுனியாவில் இன்று தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியாவில் 3483 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கொட்டகைக்கு முன்பாகவே அவர்கள் இப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதன்போது காணாமல் போன தமது உறவுகளின் படங்களையும் அமெரிக்க ஐரோப்பிய கொடிகளையும் கையில் ஏந்தியவண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பேச்சு வேண்டாம், நடவடிக்கையும் வேண்டும், காலனித்துவ நீக்கத்தின் மூலம் தமிழர் இறையாண்மையை மீட்டெடுக்க கனடா உதவ வேண்டும்.

வவுனியாவில் ஏ9 வீதியோர போராட்டக் கொட்டகையில், காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைத் தேடி இன்று 3,483வது நாளாக நாங்கள் தொடர்ந்து காத்திருக்கிறோம்.

பல ஆண்டுகளாக வாக்குறுதிகளையும் அரசியல் பேச்சுகளையும் கேட்டுவிட்டோம். ஆனால் எங்கள் பிள்ளைகள் எங்கே என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. எங்களுக்கு இனி வெறும் பேச்சுகள் தேவையில்லை. சர்வதேச சமூகத்திடமிருந்து நடைமுறை நடவடிக்கை வேண்டும்.

எங்கள் பார்வையில், தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கும் அரசியல் எதிர்காலத்திற்கும் நிலையான தீர்வு, காலனித்துவ நீக்கத்தின் அடிப்படையில் தமிழர் இறையாண்மையை மீட்டெடுப்பதற்கான சர்வதேச சட்ட வழிமுறையை முன்னெடுப்பதே ஆகும்.

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு ஏற்பாடுகள் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான அரசியல் தீர்வை வழங்கத் தவறிவிட்டன என்பதைக் கூறி, இந்தப் பிரச்சினையை சர்வதேச சட்டத்தின் கீழ் நீதிமன்ற வழிமுறைக்கு எடுத்துச் செல்ல பிரித்தானியா தனது வரலாற்றுப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அண்மையில் லண்டனிடம் நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம்.

இப்போது எங்கள் அழைப்பு கனடாவுக்கு இன்று (3) கனடாவின் பிரதமருக்கும் வெளியுறவு அமைச்சருக்கும் எங்கள் தாய்மார்களின் சார்பில் முறையான கடிதங்களை அனுப்புகிறோம். தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை மீண்டும் முடிவில்லாத பேச்சுவார்த்தைகளுக்குள் தள்ளாமல், காலனித்துவ நீக்கம், சுயநிர்ணயம் மற்றும் இறையாண்மை தொடர்பான சர்வதேச சட்ட வழிமுறைகளை முன்னெடுக்க கனடா உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

பிரித்தானியாவிடம் நாங்கள் முன்வைத்த கோரிக்கைக்கு கனடாவும் ஆதரவளித்து, தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைக்கு சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு தீர்வைத் தேடுவதற்கு உதவ வேண்டும்.

முந்தைய செய்தி வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல்
அடுத்த செய்தி வடக்கு மாகாண சபையின் திணைக்களங்களுக்கு விசேட கௌரவிப்பு நிகழ்வு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

புளியங்குளத்தில் பேருந்து, மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – ஒருவர் பலி

ஜூலை 31, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ். போதனாவிற்குள் அத்துமீறி நுழைந்தவருக்கு 55 ஆயிரம் நஷ்ட ஈடு

டிசம்பர் 16, 2025
இலங்கை

முச்சக்கர வண்டியும் மோட்டார் காரும் மோதியதில் ஒருவர் காயம்!

ஜூலை 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சுதந்திரபுரம் படுகொலையின் 28 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

ஜூன் 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?