Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

நா.உ.பி ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாவுக்கு எதிராக ஈரோஸ் கட்சி தலைவர் இரா. பிரபாகரன் பொலிஸில் முறைப்பாடு

ஆகஸ்ட் 22, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா கடந்த காலத்தில் ஓட்டமாவடி காளி கோவிலை இடித்தமை, நீதவானை இடமாற்றியது, தற்கொலை குண்டுதாரியான சஹ்ரானுடன் தொடர்பில் இருந்தது மற்றும் பல ஆயிரம் ஏக்கர் அரச காணிகளை சூறையாடியுள்ளார்.

அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை (22) முறைப்பாடு செய்துள்ளதாக ஈரோஸ் கட்சி தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்.

ஈரோஸ் கட்சி தலைவர் இராஜநாதன் பிரபாகரன் .இன்று சனிக்கிழமை (22) மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா எதிராக முறைப்பாடு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 1990ம் ஆண்டில் இருந்து ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா இந்த கிழக்கு மாகாணத்திற்கு செய்த அநீதிகள் இரு சமூகங்களையும் பிரித்ததுடன் மட்டுமல்ல ஒன்றாக பின்னிப் பிணைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் இன துவேசம் மூலம் பிளைவை ஏற்படுத்தி வரும் செய்யும் செயல்பாடு இன்று முற்றுப்பெறும்.

இவர் தொடர்பான சகல ஆவணங்களையும் இறுவெட்டு மூலமும் எழுத்து மூலமும், ஆவண புகைப்படங்களை மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் வழங்கி முறைப்பாடு செய்துள்ளார்.

இதில் மட்டக்களப்பு நீதவான் மாற்றி தனக்கு சாதகமான நீதவானை கொண்டுவந்து உத்தரவு பிறப்பித்தது. மற்றது ஓட்டமாவடியில் இருந்த காளி கோவிலை இடித்து அதில் மீன் சந்தை மற்றும் பள்ளிவாசல் அமைத்துள்ளதாக அவரது வாயால் தெரிவித்துள்ளது தொடர்பாகவும் மற்றும் ஸஹ்ரானுடன் கைகோர்த்து ஒன்றாக இருந்து உறவு கொண்டாடி ஒரு மாதத்தின் பின்னர் தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இவருக்கும் ஸகரானுக்கும் என்ன தொடர்பு என்பது தொடர்பாகவும்

மாவட்டத்தில் அவர் அதிகாரத்தை வைத்து பல ஆயிரம் ஏக்கர் அரச காணிகளை சூறையாடியுள்ளது தொடர்பாக தீர்வை பெற்றுத் தருமாறு அந்த முறைப்பாட்டில் பதிவு செய்துள்ளேன் அதன்போது பொலிசார் அதனை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு விசாரணை செய்வார்கள் என தெரிவித்தனர்.

அதேவேளை இஸ்லாமிய மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இது இஸ்லாமிய மக்களுக்கு எதிரானது அல்ல அவர்களை எப்போதும் நேசிப்பவன் எனவே இது ஒரு தனிநபர் அராஜகத்துக்கு எதிரானது ஆகவே தமிழ் பகுதியிலும் இப்படியான அராஜகம் செய்த ஆதிக்கத்தை உடைத்துள்ளேன். அதே மாதிரியான ஒரு செயல்பாடுதான் இது இதனை இஸ்லாமிய மக்களுக்கு எதிரான செயற்பாடாக கருதவேண்டாம் என்றார்.

முந்தைய செய்தி நீதிக்கான நீள்பயணத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை
அடுத்த செய்தி யாழிற்கு வருகை தந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மயிலிட்டி மீன்பிடித்துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி!

செப்டம்பர் 1, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

West Island வரை பயணத்தை ஆரம்பிக்கும் மொன்றியல் REM ரயில் சேவை.

ஏப்ரல் 15, 2026
இலங்கை

மட்டு கருவப்பங்கேணியில் கேரளகஞ்சாவுடன் மூவர் கைது!

ஆகஸ்ட் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தனது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக, முறைப்பாட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார் பிள்ளையான்!

மே 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?