Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

ரஷிய ட்ரோன் தாக்குதல்: வணிக வளாகம் தகர்ந்து 14 பேர் உயிரிழப்பு

ஆகஸ்ட் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உக்ரைன் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கிரிவி ரிஹ் நகரில் உள்ள ஒரு பரபரப்பான வணிக வளாகத்தைக் குறிவைத்து ரஷியா நடத்திய கொடூரமான ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அதிபர் விளாடிமிர் செலென்ஸ்கி சொந்த ஊரான இந்நகரில் பகல் நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் 22 குழந்தைகள் உட்பட 120-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகப் பிராந்திய ஆளுநர் ஒலெக்சாண்டர் ஹன்ஷா தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்களில் 29 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்தத் தாக்குதலை “முற்றிலும் வஞ்சகமான மற்றும் இழிவான பயங்கரவாதச் செயல்” என உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலென்ஸ்கி கடுமையாகச் சாடியுள்ளார்.

முதல் தாக்குதல் நடந்த அரை மணி நேரத்திற்குப் பிறகு, சம்பவ இடத்திற்கு மீட்புப் பணிகளுக்காக விரைந்து வந்த அவசர கால மீட்புக் குழுவினரைக் குறிவைத்து திட்டமிட்டே இரண்டாவது ரஷிய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

சர்வதேச சமூகம் ரஷியாவின் இந்த அக்கிரமத்திற்கு உரிய முறையில் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

போர் நான்கரை ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், உக்ரைன் நகரங்கள் மீதான தனது வான்வழித் தாக்குதல்களை ரஷியா தீவிரப்படுத்தியுள்ளது.

இரு தினங்களுக்கு முன்பு தலைநகர் கீவ் மீது ரஷியா நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்குப் பதிலடியாக, ரஷியாவின் போரிடும் திறனைக் முடக்கும் நோக்கில் உக்ரைனும் ரஷிய எல்லைக்குட்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் இராணுவ உள்கட்டமைப்புகள் மீது வான்வழித் தாக்குதல்களை அதிகரித்து வருகிறது.

முந்தைய செய்தி கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்: பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியாவுடன் கைக்கோர்க்க விருப்பம் தெரிவித்த வங்கதேசம்
அடுத்த செய்தி பள்ளி ஆய்வின் போது பாஜக-வினர் தாக்குதல் – ராஜஸ்தான் அமைச்சருக்கு சிஜேபி எச்சரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

லண்டனில் தமிழீழ தேசியக் கொடி நாள்

நவம்பர் 24, 2025
அண்மைய செய்திகள்உலகம்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு தாக்குதலை தடுக்க புதிய சட்டம்!

செப்டம்பர் 27, 2024
உலகம்

ஜப்பானில் உணரப்பட்ட நிலநடுக்கம்

அக்டோபர் 18, 2024
உலகம்

நெதன்யாகு மீதான ஊழல் வழக்குவிசாரணைக்கு எதிர்ப்பு வெளியிட்ட ட்ரம்ப!

ஜூன் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?