Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

அரசு நலத்திட்டங்களைப் பரப்பும் சோஷியல் மீடியா கிரியேட்டர்களுக்கு ஊக்கத்தொகை: பீகார் அரசு!

ஆகஸ்ட் 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்தியாவின் பீகார் மாநில அரசின் நலத்திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் மற்றும் சாதனை வீடியோக்களைப் பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் சோஷியல் மீடியா கிரியேட்டர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் புதிய திட்டத்திற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் “பீகார் சமூக ஊடகங்கள் மற்றும் பிற ஆன்லைன் ஊடக (திருத்த) விதிகள் 2026”-ன் கீழ் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் அரசின் அதிகாரப்பூர்வப் பட்டியலின் கீழ் பதிவு செய்துள்ள கிரியேட்டர்களுக்கு, அவர்கள் பதிவிடும் வீடியோக்களுக்குப் பெறப்படும் ஒவ்வொரு 1 லட்சம் வியூஸ்களுக்கும் ரூ.10,000 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

மேலும், ஒரு தனிப்பட்ட வீடியோவிற்கு அளிக்கப்படும் அதிகபட்ச ஊக்கத்தொகை ரூ.1,00,000 வரை வரம்பு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, 10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட வியூஸ்களைப் பெறும் வீடியோக்களுக்கு முழுத் தொகையான ரூ.1 லட்சம் கிடைக்கும்.

வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட நாளிலிருந்து 30 நாட்கள் நிறைவடைந்த பின்னரே அதற்கான வியூஸ்கள் சரிபார்க்கப்பட்டு தொகைக் கணக்கிடப்படும்.

இருப்பினும், இத்திட்டம் அனைத்து சோஷியல் மீடியா பயனர்களுக்கும் நேரடியாகப் பொருந்தாது.

கிரியேட்டர்கள், பக்கங்கள் மற்றும் சேனல்கள் பீகார் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையில் முறையாகப் பதிவு செய்து எம்பேனல் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

போலி கணக்குகள் மற்றும் செயற்கையான வியூஸ்களைத் தடுப்பதற்காகக் கிரியேட்டர்களின் சேனல் பின்தொடர்பாளர்களின் எண்ணிக்கையை அரசுத் துறை குறிப்பிட்ட இடைவெளியில் தணிக்கை செய்து சரிபார்க்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி இங்கிலாந்து திரும்பும் இளவரசர் ஹாரி மற்றும் மனைவி மேகன்!
அடுத்த செய்தி மேகதாது அணையால் தமிழ்நாட்டிற்கே பயன்: கர்நாடக துணை முதல்வர் உறுதி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் பட்டியல் வெளியீடு!

ஆகஸ்ட் 20, 2026
இந்தியா

பாரத பிரதமரை சந்தித்த தமிழக முதல்வர்

மே 27, 2026
இந்தியா

இந்தியாவின் செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை இரத்து!

ஜூலை 29, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

டெல்லி செங்கோட்டையில் கார் குண்டு வெடிப்பு – 8 பேர் உயிரிழப்பு!(Video)

நவம்பர் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?