Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மாநாட்டிற்கு பூரண ஆதரவு கிடைக்கும் – பா.உ .செல்வம் அடைக்கலநாதன்

ஆகஸ்ட் 18, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மாநாட்டிற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழீழ விடுதலை இயக்கமும் பூரண ஆதரவை வழங்குவதோடு, அவர்களுடன் தோளோடு தோள் நிற்கின்ற ஒரு செயல்பாட்டை முன்னெடுக்க உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (18) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இராணுவத்திடம் கண் முன்னே ஒப்படைக்கப்பட்ட கணவன், குழந்தைகள், உறவுகள், காணாமல் போயுள்ள நிலையில் காணாமல் போயிருக்கும் உறவுகளைத் தேடி கொண்டிருக்கின்ற காணாமல் போன உறவுகளின் தாய்மார்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாநாடு ஒன்றை நடத்த இருக்கிறார்கள்.

உண்மையில் இந்த உறவுகளின் போராட்டங்கள் அவர்களுடைய தேடுதலுக்கான நடவடிக்கைகள் தான் இன்றைக்கும் எங்களுடைய தேசத்திலே உலக நாடுகளில் பேசும் பொருளாக இருந்து கொண்டிருக்கிறது.

அது ஒன்று தான் எங்களுடைய தேசத்தின் மீது இன்றைக்கு உலக நாடுகள் தங்களுடைய பார்வையை திருப்புகின்ற ஒரு செயல்பாடாக இருக்கிறது.

செம்மணி மனித புதைகுழி, எங்களுடைய இனத்தினுடைய படுகொலைகள், உயிரோடு புதைக்க பட்டவர்களைத் தோண்டு கின்ற ஒரு மாபெரும் இனத்தினுடைய இந்தப் படுகொலையை நினைவூட்டு கின்ற செயல்பாடாக இன்றைக்கு இருந்து கொண்டிருக்கின்ற சூழலிலே, காணாமல் போன, தேடுகின்ற உறவுகளுடைய அந்த உடல்களும் அங்கே இருக்கலாம் என்ற ஒரு சந்தேகத்தோடு இன்றைக்கு எல்லோரும் இருந்து கொண்டிருக்கின்றோம்.

அதைவிட பொதுமக்கள், ஏனைய இடங்களில் கைது செய்யப்பட்டவர்கள் அங்கே புதைக்கப்பட்டிருப்பார்களா? தமிழினத்தை அழிக்க, ஒழிக்க நினைக்கிற இந்த சக்திகள் எந்த அளவுக்கு படுபாதகமான ஒரு செயல்பாட்டை எங்கள் மீது செய்திருக்கிறது என்பதை இன்றைக்கு வெளிப்படையாக தெரிவிக்கிற ஒரு உடைமை என்னவென்றால், அது செம்மணி புதைகுழி என்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

அதன் அடிப்படையில் காணாமல் போன எங்களுடைய தாய்மார்கள் எதிர்வரும் 30 ஆம் தேதி ஏற்பாடு செய்துள்ள அவர்களுடைய மாநாட்டிற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழீழ விடுதலை இயக்கமும் பூரண ஆதரவை நல்குகிறது.

பூரண ஆதரவுடன் அவர்களோடு தோளோடு தோள் நிற்கின்ற ஒரு செயல்பாட்டை நாங்கள் நிச்சயமாக செய்ய இருக்கிறோம் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் பல்வேறு விடையங்கள் குறித்து குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தார்.

முந்தைய செய்தி யாழில். துஸ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றத்தில் இளைஞன் கைது
அடுத்த செய்தி செம்மணி மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மூன்று என்புக்கூட்டு தொகுதிகள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி

ஏப்ரல் 1, 2026
அண்மைய செய்திகள்விளையாட்டு

தம்புள்ளையில் பதற்றம்: இலங்கை வீரருக்கும் வைபவ் சூர்யவன்ஷிக்கும் இடையே வாக்குவாதம்!

ஜூன் 15, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

பிளையிங் வேல்ஸ் நிறுவனத்திற்கான அடுத்தகட்ட நிதியுதவிகளை அதிரடியாக நிறுத்தியது கியூபெக் மாகாண அரசு.

ஜூன் 1, 2026
1
இலங்கை

தொழிற் பயிற்சிகளை பெறவேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

மார்ச் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?