Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

மராத்தி தெரியாவிட்டால் உரிமம் ரத்து: ஓட்டுநர்களுக்கு மகாராஷ்டிர அரசு கடும் எச்சரிக்கை!

ஆகஸ்ட் 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மகாராஷ்டிர மாநிலத்தில் இயங்கும் முச்சக்கர வண்டி மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு மராத்தி மொழியில் பேசவும் உரையாடவும் தெரிந்திருப்பது இனி கட்டாயமாக்கப்பட உள்ளது.

இதற்காக 1989-ஆம் ஆண்டின் மகாராஷ்டிர மோட்டார் வாகன விதிகளில் திருத்தங்களைச் செய்ய மாநில அரசு புதிய வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள ஓட்டுநர்கள் தங்களது பயணிகளுடன் எளிதாக உரையாடி, அவர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய விதிகளின்படி, மராத்தி மொழியில் அடிப்படை உரையாடல் அறிவு இல்லாத முச்சக்கர வண்டி அல்லது வாடகை டாக்சி ஓட்டுநர்களுக்கு முதற்கட்டமாக மராத்தி மொழியைக் கற்றுக் கொள்ள ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்படும். அந்த அவகாசத்திற்குள் அவர்கள் மொழியைக் கற்கத் தவறினால், அவர்களின் ஓட்டுநர் உரிமம் 3 மாத காலத்திற்கு இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்படும்.

இந்தத் தற்காலிகத் தடை காலத்திற்கு பிறகும் ஓட்டுநர் மராத்தி மொழியைக் கற்க தவறினால், அவரது ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாகவே ரத்து செய்வதற்குச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.  ஏற்கனவே ஆகஸ்ட் 15-க்குப் பிறகு இதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படாது என எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சட்டத் திருத்தமும் கொண்டு வரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி டோர்வாலில் புதிய பல்முனை போக்குவரத்து மையம்: இணை மேம்பாட்டுப் பணிகள் ஆரம்பம்
அடுத்த செய்தி வாட்ஸ்அப் மூலம் ‘டிஜிட்டல் கைது’: ரூ.2.5 கோடி இழந்த ஓய்வுபெற்ற நீதிபதி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இந்தியா

பாகிஸ்தானின் 3 இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்

மே 6, 2025
இந்தியா

மத்திய பிரதேசத்தில் மானிய உரங்கள் விற்பனைக்கு திடீர் தடை: 82 லட்சம் விவசாயிகள் தவிப்பு!

ஆகஸ்ட் 16, 2026
இந்தியா

டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

ஏப்ரல் 14, 2026
இந்தியா

உத்தர பிரதேசத்தில் அரசு மருத்துவர்கள் 70 வயது வரை பணியாற்ற அனுமதி

செப்டம்பர் 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?