Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் மாநகர சபையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்!

ஆகஸ்ட் 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ் மாநகர சபையின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளுக்கு மாநகர ஆணையாளர் உள்ளிட்ட மாநகர சபை நிர்வாக உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாகப் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டி, மாநகர முதல்வர், பிரதி முதல்வர் உள்ளிட்ட மாநகர சபை உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

யாழ் மாநகர சபை மாதாந்த அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிலையில் தேநீர் இடைவேளையின் போது மாநகர சபையின் ஆணையாளர் அலுவலகம் முன்பாக மதியம் ஒன்று கூடிய மாநகர சபை மக்கள் பிரதிநிதிகள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ் மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் கூட்டுப் பங்களிப்புடன் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மாநகர சபை அதிகாரிகளின் முறையற்ற செயற்பாடுகளினால், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் மக்களின் அடிப்படை நலன்களை உரிய முறையில் நிறைவேற்றவும், மக்களை சென்றடையவும் முடியாத இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சபையின் உறுப்பினர்கள் கவலை வெளியிட்டனர்.

மாநகர சபையின் ஊடாக மக்களுக்குச் சென்று சேர வேண்டிய அத்தியாவசிய சேவைகள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் என்பனவற்றில் அதிகாரிகள் வேண்டுமென்றே தாமதங்கள் ஏற்படுத்தி வருவதாகவும், மக்கள் பிரதிநிதிகளின் அதிகார வரம்புகளுக்குள் தலையிட்டு முடக்க முற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

முன்னதாக, சபை அமர்வின்போது குறித்த அதிகாரிகளின் திட்டமிட்ட இடையூறுகள் தொடர்பில் மாநகர சபை உறுப்பினர்கள் விவாதித்திருந்தனர்.

குறித்த விடயம் தொடர்பில் ஆணையாளரிடம் ஊடகங்கள் கருத்து கேட்க முற்பட்டபோது, ஊடகங்களை சந்திக்கவோ கருத்து கூறவோ தனக்கு அவசியம் இல்லை என யாழ் மாநகர சபை ஆணையாளர் அரவிந்தராஜ் தெரிவித்தார்.

முந்தைய செய்தி மட்டக்களப்பில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலி அறுப்பு
அடுத்த செய்தி யாழ். அரியாலையில் இடம்பெற்ற பெண்கள் மாநாடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

கச்சா எண்ணெய் விலை உயர்வு: மீண்டும் வலுப்பெற்ற கனேடிய டாலர்!

செப்டம்பர் 1, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் துப்பாக்கிச்சூட்டில் பலி

ஆகஸ்ட் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

காசல் மகளிர் வைத்தியசாலையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!

நவம்பர் 13, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

லீக் கால்பந்து – இறுதிப் போட்டிக்கு முன்னேறிய போர்த்துக்கல் அணி

ஜூன் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?