நாட்டில் சீரற்ற வானிலை நிலவுவதால் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (07) விடுத்துள்ளது.
இதன்படி நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு, தலவாக்கலை, அம்பகமுவ, நுவரெலியா மற்றும் நோர்வூட் ஆகிய பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்கும் இரண்டாம் கட்டத்தின் கட்டத்திட்கு கீழ் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, புலத்கொஹீபிட்டிய , யட்டியாந்தோட்டை, தெரனியகல, அரநாயக்க ஆகிய பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையானது கண்டி மாவட்டத்தின் தொலுவ, பன்வில, மெதந்தும்பர, உடபலாத, கங்க இஹல கோரள, உடுத்தும்பர, ஓபநாயக்க, இம்புல்பே ஆகிய பகுதிகளுக்கும் இவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

