இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2 ஆவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
178 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 94 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

