இலங்கையில் சீரற்ற வானிலை நிலவுகின்ற நிலையில் மத்திய மலை நாட்டின் பல்வேறு இடங்களிலும் வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தின் பல இடங்கள் பனி மூட்டம் காணப்படுவதால் வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக நுவரெலியா,கந்தப்பளை , இராகலை, நானு ஓயா, டொப்பாஸ் போன்ற பகுதிகளில் வழமைக்கு மாறாக பனி காணப்படுவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

