Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது – பேராசிரியர் ரகுராம் வழக்கில் எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வாதம்

ஜூலை 27, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாண பல்கலைக்கழக கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம், தனக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினார்கள் தொடர்ந்த வழக்கு எதிர் மனுதாரர்களின் எழுத்து மூல சமர்ப்பணத்திற்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 09ஆம் திகதிக்கு மன்று திகதியிட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம் ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக மாணவியும் இரண்டு வருட காலமாக தற்காலிக உதவி விரிவுரையாளராகவும் கடமையாற்றிய பெண் ஒருவர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்ததை அடுத்து , பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்ரமணியம் ரகுராம் குறித்த முன்னாள் மாணவியுடன் உரையாடிய தொலைபேசி ஒலிப்பதிவு என சில ஒலிப்பதிவுகள் டிக்டோக் தளம் மற்றும் முகநூல்களில் பகிரப்பட்டன.

அதன் அடிப்படையில் சிலரால் முகநூல்களிலும் யூடியூப் தளத்திலும் கருத்துக்கள் பகிரப்பட்டன.

இந்நிலையிலேயே பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில், நிகழ்நிலை காப்பு சட்டத்தின் பிரிவு 20இன் கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராமால், தன் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ள மாணவி, அவரது நண்பியான முன்னாள் மாணவி , யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் , ஆகியோருடன் இணைய இடையீட்டாளர்களாக யூடியூப் , டிக்டொக் , பேஸ்புக் ஆகியவை மனுதாரர் தொடர்பிலான தடை செய்யப்பட்ட கூற்றுக்களை பிரசுத்தமைக்கு எதிராக 14 பேரை எதிர் மனுதாரர்களாக குறிப்பிட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிர் மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலையாகி தமது வாதங்களை முன் வைத்தனர்.

அதன் போது, குற்றவாளிகளோ , சந்தேகநபர்களோ , சட்டத்தினை ஆயுதமாக பயன்படுத்த முடியாது என எதிர்மனுதாரர் சார்பில் மன்றில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி தனது ஆட்சேபனையை மன்றில் தெரிவித்தார்.

அத்துடன் யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி , தனது கட்சிக்காரரான துணைவேந்தர் பரீட்சை கடமைக்கு சென்றமையால் , இன்றைய தினம் மன்றில் முன்னிலையாகவில்லை என மன்றுக்கு அறிவித்தார்.

அதனை தொடர்ந்து எதிர்மனுதாரர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் தமது பூர்வாங்க ஆட்சேபனையை மன்றில் தெரிவித்தனர்.

அதனை அடுத்து எழுத்து மூல சமர்ப்பணங்களை முன் வைக்குமாறு தெரிவித்த மன்று , வழக்கினை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி மன்னாரிற்கு அமெரிக்காவின் அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அதிகாரிகள் விஜயம்
அடுத்த செய்தி மன்னார் மாவட்ட செயலகத்தில் தேசிய நேர்மை வாரத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய பஞ்சாங்கம் மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 26 ஜனவரி 2026

ஜனவரி 26, 2026
இலங்கை

சட்டவிரோத துப்பாக்கிகளுடன் மூவர் கைது.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் மாவட்டம் – மாந்தை மேற்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

மே 6, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

தமிம் இக்பாலுக்கு திடீர் மாரடைப்பு!

மார்ச் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?