Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கோப் குழு தனிநபர்களை இலக்கு வைத்து அரசியல் தாக்குதல்களை நடத்துகின்றது – நா.உ.சாணக்கியன் இராசமாணிக்கம்

ஜூலை 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கோப் குழு என்று அழைப்பப்படும் பொது நல்வாழ்வு நிறுவனங்கள் பற்றிய நாடாளுமன்றக் குழுவின் அறிக்கைகளை அரசியல் பழிவாங்கும் ஆயுதமாகவோ அல்லது அரசியல் நோக்கங்களுக்காகத் தெரிந்தெடுத்த வகையிலோ பயன்படுத்தக் கூடாது என, கோரிக்கை
முன்வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். நாடாளுமன்றக் கண்காணிப்பு நடவடிக்கைகளில் நடுநிலைமை, வெளிப்படைத் தன்மை மற்றும் முறையான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசு நிறுவனங்களின் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதில் கோப் குழு முக்கிய பங்கு வகிக்கின்ற போதிலும், சுயாதீன விசாரணைகளை
நடத்துவதற்குப் பதிலாக, தனிநபர்களை இலக்கு வைத்து அரசியல் தாக்குதல்களை நடத்துவதற்காகவே அதன் அறிக்கைகள் அண்மைக் காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகப் பலமான கவலைகள் எழுந்துள்ளதாகச் சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், கோப் குழுவின் அறிக்கை ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அதுகுறித்த முழுமையான விசாரணைகள் நிறைவடைவதற்கு முன்னரோ அல்லது தகுதியுள்ள நீதிமன்றம் ஒன்றினால் குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முன்னரோ, சம்பந்தப்பட்ட தனிநபர்களையோ அல்லது நிறுவனங்களையோ பகிரங்கமாகத் தண்டிப்பதற்கோ குற்றஞ்சாட்டுவதற்கோ அவ்வறிக்கையைப் பயன்படுத்தக் கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முறையான சட்ட நடைமுறைகள் (Due Process) மற்றும் குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் குற்றமற்றவர் என்ற சட்டக் கோட்பாடு
(Presumption of innocence) ஆகியவை கண்டிப்பாக மதிக்கப்பட வேண்டும் என, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி கியூபெக்கில் வாரயிறுதியில் இடம்பெற்ற தொடர் வீதி விபத்துக்களில் 8 பேர் உயிரிழப்பு
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணியை பார்வையிட மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம்!

ஆகஸ்ட் 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வட மாகாண ஆளுநரை சந்தித்த புதிய கட்டளைத் தளபதி

ஏப்ரல் 20, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த நடவடிக்கை

ஜனவரி 29, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் தேசிய வாக்காளர் தினம் முன்னெடுப்பு

பிப்ரவரி 1, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?