Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டு நீதிமன்ற சிறைக்கூட்டில் தற்கொலைக்கு முயற்சி செய்த கைதி

ஜூலை 20, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பில் பல திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைதி ஒருவர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற கைதிகள் கூட்டிற்குள் தனது கழுத்தை பிளேட்டால் அறுத்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று திங்கட்கிழமை (20) பிற்பகல் 3.00 மணியளவில் இடம் பெற்றுள்ளதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றி தெரிய வருவதாவது,

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதான புகையிரத நிலையத்து முன்னால் உள்ள கடை ஒன்றில் 16 ஆயிரம் ரூபா திருடிய மற்றும் கடை ஒன்றை உடைத்து திருடியது போன்ற 3 திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக குறித்த நபரை கடந்த வருடம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த பிணையில் வெளிவந்தவர் வழக்கிற்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகி வந்துள்ளதையடுத்து நீதிமன்ற பிடியாணை பிறப்பித்ததையடுத்து கடந்த 13 ம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து யாழ் பொலிசார் நீதிமன்ற பிடிவிறாந்தற்கு கைது செய்து மட்டக்களப்பு நீதிமன்றில் கடந்த 15 ம்திகதி ஆஜர்படுத்தியதையடுத்து அவரை 20ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதையடுத்து மட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இந்த குறித்த நபரை வழக்கு விசாரணைக்காக சம்பவ தினமான இன்று திங்கட்கிழமை (20) காலையில் சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்துவரப்பட்டு நீதிமன்ற சிறைக் கைதிகள் கூட்டில் அடைக்கப்பட்டா

இதனை தொடர்ந்து குறித்த நபரை திறந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான் அவரை தொடர்ந்து எதிர்வரும் 3ம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதையடுத்து அவரை நீதிமன்ற சிறைக்கூடத்தில் அடைத்தனர்

இந்த நிலையில் தொடர்ந்து திறந்த நீதிமன்றம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது பிற்பகல் 3.00 மணியளவில் நீதிமன்ற சிறைக்கூடத்தில் உள்ள மலசல கூடத்திற்குள் வைத்து குறித்த கைதி தனது கழுத்தையும் கையையும் பிக்கரக சேவிங் பிளோற்றல் வெட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நிலையில் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது

குறித்த நபர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை தையிட்டி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய தனஞ்சே புஸ்பகுமார் எனவும் இவருக்கு எதிராக மட்டக்களப்பில் திருட்டுக்கள் தொடர்பாக 3 வழக்குகள் நீதிமன்றில் இடம்பெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பாக மட்டு தலைமையக பொலிசார் இடத்துக்கு தடயவியல் பொலிஸ் பிரிவினர் அழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று நடைபெற்றது
அடுத்த செய்தி கயானாவில் கப்பல் விபத்து – 66 பேர் மாயம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

‘வடக்கு மாகாண வணிகக் கொள்கை’ ஒன்றை உருவாக்க ஆலோசனை

ஏப்ரல் 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் முதியவரொருவர் உயிரிழப்பு…

ஏப்ரல் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மருதனார்மடம் தோட்ட கிணற்றில் இனந்தெரியாத நபரின் சடலம்

ஏப்ரல் 7, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

நல்லூர் மகோற்சவம் ஆரம்பம் – பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிப்பு!

ஜூலை 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?