Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

என்.எம் இன்ஸ்டிடியூட் நடத்தும் பிரம்மாண்ட திறமைக் கண்காட்சி: கைத்தொழில் கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

ஜூலை 8, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE
வீடுகளில் முடங்கிக்கிடக்கும் கைத்தொழில் கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக, காத்தான்குடி என்.எம் இன்ஸ்டிடியூட் (NM Institute) எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில், இலங்கையிலுள்ள அனைத்து பாகத்திலிருந்தும் பங்கு கொள்ளக்கூடிய வகையில் பிரம்மாண்டமான திறமைக் கண்காட்சிப் போட்டி ஒன்றை நடத்தவுள்ளது.
காத்தான்குடியில் உள்ள ‘ரோயல் ஜுமைரா ஹால்’ (Royal Jumairah Hall) இல் நடைபெறவிருக்கும் இப்போட்டி குறித்து என்.எம் இன்ஸ்டிடியூட்டின் பணிப்பாளர் முஸ்தகிமா நௌபல் இன்றைய தினம் கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,  இது வெறும் கல்விப் பட்டம் பெற்றவர்களுக்கான போட்டி அல்ல என்றும், கல்வித் தகுதி எதுவாக இருந்தாலும், தங்களுக்குள் ஏதேனும் ஒரு கைத்தொழில் திறமையைக் கொண்டுள்ள வயதுவரையின்றி அனைவரும் இதில் பங்கேற்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்திறமைக் கண்காட்சியில் ஆரி வேலைப்பாடு, தையற்கலை, கேக் தயாரிப்பு, பேஸ்ட்ரி பேக்கரி, சமையற்கலை, எம்பிராய்டரி, கலை மற்றும் கைவினைப் பொருட்கள், மணமகள் அலங்காரம் மற்றும் சிறியவர்களுக்கான ஜூனியர் செஃப் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இப்போட்டியில் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு அவர்களின் திறமைக்கேற்ப தங்கப் பதக்கம், வெள்ளிப் பதக்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.
அத்துடன், பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்களும், அனுசரணையாளர்களால் வழங்கப்படும் சிறப்புப் பரிசு வவுச்சர்கள் மற்றும் நினைவுப் பரிசுகளும் காத்திருக்கின்றன. 3,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இப்போட்டியை நேரில் பார்வையிடவுள்ளதால், பங்கேற்பாளர்களுக்குப் புதிய தொழில் வாய்ப்புகளும், ஓடர்களும் கிடைக்க அரிய சந்தர்ப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்.எம் இன்ஸ்டிடியூட் இந்தத் திட்டத்தை வணிக நோக்கமாகக் கொள்ளாமல், முழுக்க முழுக்க சேவை நோக்கத்துடன் நடத்துகிறது. இப்போட்டியின் மூலம் பெறப்படும் வருமானம், நிர்வாகச் செலவுகள் போக மீதி அனைத்தும் மாற்றுத்திறனாளி பிள்ளைகளின் நலனுக்காக முழுமையாக நன்கொடையாக வழங்கப்படவுள்ளது.  குறிப்பாக, அவர்கள் நடப்பதற்கும், கேட்பதற்கும் தேவையான சக்கர நாற்காலிகள் போன்ற உபகரணங்களைப் பெற்றுக்கொடுக்க இந்த நிதி பயன்படுத்தப்படும்.
தற்போது காத்தான்குடியில் இயங்கி வரும் என்.எம் இன்ஸ்டிடியூட், மிக விரைவில் கொழும்பிலும் தனது கிளையைத் திறக்கவுள்ளது. குறைந்த கட்டணத்தில் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், இந்தத் திறமைக் கண்காட்சியில் பங்கேற்கவும் விருப்பமுள்ளவர்கள் இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலிருந்தும் தங்களது பெயர்களைத் தயக்கமின்றிப் பதிவு செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய செய்தி தேசிய மக்கள் சக்தி உளவியல் போரை ஆரம்பித்துள்ளனர் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
அடுத்த செய்தி பலாலி இராஜேஸ்வரி அம்மனுக்கு செல்லும் பாதையை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பிரதேச சபையின் நடவடிக்கையில் தலையீடு செய்யும் பலாலி போலீசாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

மே 21, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

திரிபோஷா தட்டுப்பாட்டை நீக்க புதிய நடவடிக்கை

மார்ச் 4, 2026
இலங்கை

யாழ்ப்பாணத்தில் விபத்து – பிரான்ஸ் நாட்டவர்கள் உள்ளிட்ட ஐவர் படுகாயம்

மார்ச் 12, 2026
இலங்கை

தொடர்ச்சியாக அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகம்!

செப்டம்பர் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?