Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் தொடர்பான வழக்கு தள்ளுபடி

ஜூலை 4, 2026
படிக்க 3 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பில் கொழும்பில் உள்ள பிரதான நீதிமன்றம் ஒன்றில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சே முன்னிலையாகி நிகழ்நிலையில் சாட்சியம் அளிக்க யாழ் . நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

இந்நிலையில் கொழும்பு நீதிமன்றில் திகதி குறிப்பது , மொழி பெயர்ப்பு உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட மேலதிக உத்தியோகஸ்தர்கள் தொடர்பான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்பட்ட நிலையில் வழக்கு ஆகஸ்ட் 07ஆம் திகதிக்கு மன்று திகதியிட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு மனித உரிமைகள் தினமான டிசெம்பர் மாதம் 10 ஆம் திகதி யாழ்ப்பாண நகரில் நடத்த திட்டமிடப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவரங்கால் பகுதியில் வைத்து முதல் நாள் காணாமல் ஆக்கப்பட்டனர்.

அதனை அடுத்து லலித் மற்றும் குகன் ஆகியயோரின் உறவினர்களால் ஆள்கொணர்வு மனு கடந்த 2012ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுமீதான விசாணையின்போது, இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு கொழும்பு மேன்முறையீடடு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் 2012ஆம் ஆண்டு செப்ரெம்பர் 19ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பமாகின.

அந்நிலையில் குறித்த வழக்கு விசாரணைகளின் போது கடந்த 2017ஆம் ஆண்டு மனுவின் சாட்சியாளர்கள் பட்டியலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்கள் கோத்தபாய ராஜபக்சவின் பெயர் இணைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து , கோத்தபாய ராஜபக்ச மன்றில் தோன்றி சாட்சியமளிக்குமாறு மன்று உத்தரவிட்டது.

பாதுகாப்பு காரணங்களால் தன்னால் யாழ்ப்பாணம் வர முடியாது என தொடர்ச்சியாக கோத்தபாய ராஜபக்ச தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் வழக்கு விசாரணைகளின் போது, கோத்தபாய ராஜபக்ச நிகழ்நிலை (online) ஊடாக தோன்றி மன்றில் சாட்சியம் அளிக்க தனது சட்டத்தரணிகள் ஊடாக மன்றில் விண்ணப்பம் செய்தார்.

அதனை அடுத்த, கோத்தபாய ராஜபக்ச யாழ்ப்பாணம் வருகை தருவதில் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பில் சத்திய கடதாசியை மன்றில் சமர்ப்பிக்குமாறு மன்று உத்தரவிட்டு இருந்தது

இந்நிலையில் குறித்த வழக்கு கடந்த ஜூன் மாதம் 2ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, கோட்டாபய ராஜபக்சே நிகழ்நிலை ஊடாக மன்றில் தோன்றி தனது சாட்சியங்களை பதிவு செய்ய மன்று அனுமதித்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 19ஆம் திகதி குறித்த வழக்கு யாழ்.நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, கோட்டபாய கொழும்பில் உள்ள பிரதான நீதிமன்றங்களில் ஏதாவது ஒன்றில் நேரில் தோன்றி நீதவான் முன்னிலையில் நிகழ்நிலை (online) ஊடாக சாட்சியம் அளிக்க மன்று கட்டளையிட்டது.

அதேவேளை எந்த நீதிமன்றில் முன்னிலையாக உள்ளதாகவும் , முன்னிலையாக ஏதுவான மூன்று திகதிகளையும் மன்றுக்கு தெரியப்படுத்துமாறும் , மன்று குறிப்பிடும் திகதியில் நீதிமன்றில் நேரில் முன்னிலையாகி நிகழ்நிலை ஊடாக சாட்சியம் அளிக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்று கட்டளையிட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்ட போது , கொழும்பு நீதிமன்றில் சாட்சியம் அளிக்க திகதியை பெறுவதற்காகவும் , மொழிபெயர்ப்பு உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட ஏனைய உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் ஏற்பாடுகள் செய்ய வேண்டிய தேவைகள் உள்ளமையால் வழக்கினை எதிர்வரும் ஆகஸ்ட் 07ஆம் திகதிக்கு மன்று திகதியிட்டுள்ளது.

முந்தைய செய்தி புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்
அடுத்த செய்தி மன்னாரில் சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாடுகள் மீட்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதிக்கு இடமாற்றம்

ஏப்ரல் 21, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ஹுருளுவெவ ஆலயத்திற்கு அருகில் தோட்டாக்கள் மீட்பு!

நவம்பர் 11, 2025
இலங்கை

மீனவர்களின் பிரச்சனை இதுவரையில் தீர்க்கப்படவில்லை.

பிப்ரவரி 19, 2025
இலங்கை

யாழில் சிலை உடைப்பு – ஒருவர் கைது

மார்ச் 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?