Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

நாட்டின் 31ஆவது ஆளுநர் நாயகமாக உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றார் லூயிஸ் ஆர்பர்.

ஜூன் 8, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

நாட்டின் 31ஆவது ஆளுநர் நாயகமாக (Governor General), புகழ்பெற்ற முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசரும், மனித உரிமைகள் பாதுகாவலருமான லூயிஸ் ஆர்பர் (Louise Arbour – 79) உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுள்ளார். தலைநகர் ஒட்டாவாவில் உள்ள நாடாளுமன்ற செனட் கட்டடத்தில் (Senate of Canada Building) பாரம்பரிய முறைப்படி, அதேநேரம் தற்போதைய நாட்டின் அரசியல் சூழலைக் கருத்திற்கொண்டு மிகவும் அர்த்தமுள்ள வகையில் இந்த வைபவம் அரங்கேறியுள்ளது.

இதன் மூலம், கனடாவின் அரச தலைவராகவும் (Head of State), கனடிய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாகவும் (Commander-in-Chief) அவர் தனது பணிகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். நாட்டின் தலைமை நீதிபதி ரிச்சர்ட் வாக்னர் (Chief Justice Richard Wagner) மூன்று முக்கிய உத்தியோகபூர்வப் பதவியேற்புப் பிரமாணங்களை வாசிக்க, லூயிஸ் ஆர்பர் அவற்றைக் கூறி, தனது பதவியைத் தற்காத்துக் கொள்வதாக உறுதியளித்தார்.

அவர் செனட் சபையின் பிரதான அரியணையில் (Senate Throne) அமர்ந்த அந்த வரலாற்றுப் பூர்வமான தருணத்தில், நாடாளுமன்றக் குன்றுப்பகுதியில் (Parliament Hill) இருந்து, மரியாதை பூர்வமாக 21 பீரங்கி வேட்டுகள் முழக்கப்பட்டன.

அதேநேரம், அமைதிக்கோபுரத்தில் (Peace Tower) கவர்னர் ஜெனரலுக்கான உத்தியோகபூர்வக் கொடி ஏற்றப்பட்டதோடு, இராணுவத்தின் மத்தியப் பிரிவினரால் ‘காட் சேவ் த கிங்’ (God Save the King) தேசிய வாழ்த்துப் பாடலும் இசைக்கப்பட்டது.

கடந்த 2021ஆம் ஆண்டு நாட்டின் முதலாவது பூர்வீகக்குடி (Indigenous) ஆளுநர் நாயகமாகப் பதவியேற்று, தனது ஐந்து ஆண்டுக்காலத் சேவையை நிறைவு செய்துள்ள மேரி சைமனின் (Mary Simon) இடத்திற்கே, லூயிஸ் ஆர்பர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆளுநர் நாயகமாகப் பதவியேற்ற பின், நாட்டு மக்களுக்குத் தனது முதலாவது உரையை ஆற்றிய லூயிஸ் ஆர்பர், கியூபெக் மற்றும் அல்பர்ட்டா மாகாணங்களின் அரசியல் ரீதியான தன்னாட்சிப் பிரிவினைவாத நகர்வுகளால் தேசிய ஒற்றுமைக்கு ஏற்பட்டுள்ள சவால்களை மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார். கியூபெக் மாகாணத்தின் மொன்றியல் நகரில் 1947-ஆம் ஆண்டு எளிய நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த லூயிஸ் ஆர்பர், சட்டத்துறையில் உலக அளவில் வரலாற்றுச் சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி யூத வழிபாட்டுத் தலம் மீது தீவைக்க முயன்றவர் மொன்றியல் பொலிஸாரினால் நீதிமன்றத்தில் முன்னிலை
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நீர் கொழும்பு சிறைச்சாலையில் மோதல் – 25 பேர் உயிரிழப்பு

ஜூலை 6, 2026
கனடாமுதன்மை செய்தி

பழங்குடியின மக்கள் அரசிடம் கையேந்தி நிற்கிறார்கள் – ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட்

ஜூன் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

திருகோணமலையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி (video இணைப்பு )

டிசம்பர் 1, 2025
கனடாமுதன்மை செய்தி

சைகயைினால் சர்ச்சையில் சிக்கினார் மனிடோபா எதிர்க்கட்சித் தலைவர்!

அக்டோபர் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?