Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

காங்கேசன்துறையை வந்தடைந்த சிவகங்கை கப்பல்

ஜூன் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் – நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் புதன்கிழமை காலை நாகபட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த, சிவகங்கை கப்பலானது மதியம் காங்கேசன்துறையை வந்தடைந்தது.

பின்னர் மீண்டும் மாலை காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி அதன் பயணத்தை ஆரம்பித்தது.

இதன்போது இந்தியாவில் இருந்து 93 பயணிகள் இலங்கைக்கு வந்ததுடன், 79 பயணிகள் இலங்கையில் இருந்து இந்தியாவை நோக்கி பயணித்தனர்.

குறித்த கப்பலானது சில வாரங்களுக்கு முன்னர் காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினம் நோக்கி பயணித்த நிலையில் அசாதாரண காலநிலை காரணமாக சேதமடைந்தது. இதனால் ஒரு சில வாரங்கள் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடவில்லை.

அதனைத் தொடர்ந்து சிவகங்கை கப்பலானது மீண்டும் இன்று முதல் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட ஆரம்பித்தது.

இந்நிலையில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா காங்கேசன் துறைமுகத்துக்கு இன்றைய தினம் விஜயம் செய்து, சிவகங்கை கப்பல் அதிகாரிகளுடனும், மாலுமிகளுடனும் கலந்துரையாடினார்.

அத்துடன் கப்பல் போக்குவரத்து குறித்து பயணிகளிடமும் கருத்துக்களை கேட்டறிந்தார். மேலும் கப்பலையும் பார்வையிட்டார்.

இதன்போது, யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவர் சாய் முரளி, கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன், கப்பல் நிறுவனத்தின் அதிகாரியான பகீரதன், கப்பல் நிறுவனத்தின் இந்தியாவுக்கான சந்தைப்படுத்தல் முகாமையாளர், கப்பல் நிறுவனத்தின் ஏனைய அதிகாரிகள், சுங்கத் துறை அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்தி செம்மணி மனித புதைகுழி அகழ்வில் 5 என்பு கூட்டு தொகுதிகள் இன்று அடையாளம்
அடுத்த செய்தி முல்லை மத்திய பேருந்து நிலைய நிர்மாணப்பணிகளை விரைந்து முழுமைப்படுத்துக – ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

வவுனியாவில் புற்றுநோயினால் 15 வயது மாணவன் உயிரிழப்பு

பிப்ரவரி 24, 2026
அண்மைய செய்திகள்கனடா

ஹாமில்டன் பகுதியில் கார் விபத்து – ஒருவர் பலி..!!

பிப்ரவரி 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நுவரெலியாவில் 89 பேர் உயிரிழப்பு – 73 பேர் மாயம்!

டிசம்பர் 2, 2025
இலங்கை

இந்திய கடற்படை பிரதானி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் குழு இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம்!

செப்டம்பர் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?