Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

இளம் பெண் வனேசாவின் வழக்கு – மொன்றியல் பொலிஸார் மீது குற்றச்சாட்டு!

மே 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலில் கடந்த ஜனவரி மாதம் தீப்பிடித்த நிலையில் சடலமாகக்  கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் மரணத்தில் மர்மம் நீடிப்பதாக, அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.மொன்றியலின் கிழக்குப்பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வாகனக் காப்பகத்திற்குள் 23 வயதான இளம் பெண் வனேசா ப்ரைமோவின் (Vanessa Primeau) சடலம் கண்டெடுக்கப்பட்டிருந்தது. வனேசா கடந்த சில காலமாகவே கடுமையான மனநலப் பிரச்சினைகளாலும் (Mental health issues) மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டினாலும் (Substance use) அவதிப்பட்டு வந்துள்ளார்.

ஆரம்பத்தில் இருந்தே இந்த மரணத்தைச் சந்தேகத்திற்குரியது (Suspicious death) என்று மட்டுமே வகைப்படுத்தி, புலனாய்வு செய்து வரும் மொன்றியல் பொலிஸார், இதுவரை கொலையாளி எவரையும் அடையாளம் காணவில்லை. வனேசாவின் சகோதரர் ஜொனாதன் (Jonathan) கூறுகையில், தனது தங்கை அந்த தீயில் சிக்கியிருக்க வாய்ப்பில்லை என்றும், யாரோ அவளைக் கொலை செய்துவிட்டு ஆதாரங்களை அழிப்பதற்காகவே வாகனக் காப்பகத்திற்குள் தீ வைத்துள்ளனர் என்று தாம் உறுதியாக நம்புவதாகத் தெரிவித்தார்.

இது ஒரு சாதாரண விபத்து அல்ல என்றும், திட்டமிட்ட படுகொலை (Homicide) என்ற கோணத்திலேயே பொலிஸார் விசாரணையை முடுக்கிவிட வேண்டும் என்றும், உயிரிழந்த பெண்ணின் தாய் தேரசா ப்ரைமோ (Thérèse Primeau) கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கில் மொன்றியல் பொலிஸார் (SPVM) போதிய தகவல்களைத் தங்களுக்கு வழங்காமல் மெத்தனம் காட்டுவதாகக் குற்றம் சாட்டி, சமூக ஆர்வலர்களுடன் இணைந்து, அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் மெழுகுவர்த்தி அஞ்சலிப் பேரணியையும் நடத்தியுள்ளனர்.

வனேசாவின் மரணத்திற்கு நீதி கோரியும், விளிம்புநிலை மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் ஸ்டெல்லா(Stella) என்ற பாலியல் தொழிலாளர் ஆதரவு அமைப்பு இந்த அஞ்சலிப் பேரணியை ஒருங்கிணைத்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி சிவாஜிலிங்கத்தை நேரில் சென்று பார்வையிட்ட எம்.ஏ .சுமந்திரன்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

பிரதமர் கார்னியினால் முன்மொழியப்பட்ட சட்டத்திற்க்கு எதிர்கட்சியினால் எதிர்ப்பு

ஜூன் 12, 2025
கனடாமுதன்மை செய்தி

சீனத் தயாரிப்பு மின்சார வாகனங்கள் மார்ச் 1 முதல் நாட்டிற்குள்

ஜனவரி 27, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

3 நிமிட வீடியோ அழைப்பில் பணிநீக்கம் – மொன்றியலில் கொந்தளித்த பெதஸ்தா ஊழியர்கள்

ஜூலை 16, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாண அரசுக்கெதிராக போராட்டம் முன்னெடுப்பு

செப்டம்பர் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?