டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் குளங்களில் மீன் குஞ்சுகளை விடும் திட்டத்தின் கீழ் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 109200ரூபா பெறுமதியான 18200மீன் குஞ்சுகள் இன்று விடப்பட்டன.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளரும் தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன் கலந்து கொண்டு குறித்த மீன் குஞ்சுகளை விட்டிருந்தார்.
குறித்த நிகழ்வில் தேசிய நீர் வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட விரிவாக்கல் உத்தியோகத்தர் யோ.நிசாந்தன், நீர் உயிரினச்செய்கை விரிவாக்கல் உத்தியோகத்தர் ம.மதுசன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
