தமிழக முதல்வர் விஜய் , தமது மீனவர்கள் எமது கடல் வளத்தை சுரண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் அந்தோணி பிள்ளை மாரியதாஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மீனவ கூட்டுறவு சங்க மண்டபத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த காலங்களில் எல்லை தாண்டிய மீன்பிடி பிரச்சினை அதிகரித்து வருகின்ற நிலையில் இதட்கான தீர்வை முதல்வர் விஜய் பெற்றுதர வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
