செட்டிகுளத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற முள்ளிவாய்கால் நினைவேந்தல்
முள்ளிவாய்கால் இன அழிப்பின் 17ம் ஆண்டு நினைவஞ்சலியும், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இன்றையதினம் செட்டிகுளம் மத்திய பேருந்து தரிப்பிடத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இதன்போது ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டிருந்ததுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பொதுமக்களிற்கு வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
