Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் நகரசபை கடலோரப் பூங்கா நிர்மாணப் பணிகள் – குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய தலைவர்

மே 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மன்னார் நகரசபையின் மேற்பார்வையில், மன்னார் நுழைவாயில் பாலத்திற்கு அருகே புதிதாக அமைக்கப்பட்டு வரும் கடலோரப் பூங்காவின் (Coastal Park) முதற்கட்டப் பணிகளை வடமாகாண சுற்றுலா அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டனர்.

வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் நிதி பங்களிப்புடன், மன்னார் நகரசபையின் மேற்பார்வையில் இந்தப் பூங்கா நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

இப்பூங்காவின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும், அதனை பார்வையிட்ட அதிகாரிகள் கட்டுமானத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

குறிப்பாக, தரைத்தளம் மற்றும் பூங்காவின் அழகுபடுத்தல் பணிகளில் காணப்படும் பலவீனங்கள் குறித்து அதிருப்தி வெளியிட்ட குழுவினர், அவற்றைச் சீர் செய்வதற்கான ஆலோசனைகளை வழங்கினர்.

இது குறித்து வட மாகாண சுற்றுலாப் பணியக தலைவர் கருத்து தெரிவிக்கையில்

மன்னார் நகரசபைக்கு உட்பட்ட மன்னார் கோஸ்டல் பார்க் (Coastal Park) பகுதியை பார்வை யிட்டோம் மன்னார் நுழைவாயிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள இது, மாலை நேரங்களில் மக்கள் வந்து செல்லக்கூடிய ஒரு அழகான இடமாகும்.

வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் நிதியுதவியுடன் முதற்கட்டப் பணிகள் இங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளன.எனினும், தற்போது செய்யப் பட்டுள்ள பணிகள் எங்களுக்கு முழுமையான திருப்தி இல்லை.

சில கட்டுமானக் குறைபாடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளுடன் பேசி, இரண்டாம் கட்டப் பணிகளின் போது இப்பூங்கா இன்னும் மெருகூட்டி, சுற்றுலாப் பயணிகள் மற்றும் முதியவர்கள் அமைதியாக பொழுது போக்கும் இடமாக மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார். இந்த விஜயத்தின் போது, தேசிய மக்கள் சக்தியின் மன்னார் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் அக்கட்சியின் முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ஹண்டாவைரஸ்’ தொற்று பரவல் – பிரிட்டிஷ் கொலம்பியாவில் அழைத்து வரப்பட்ட நான்கு கனடியர்கள்
அடுத்த செய்தி யாழில். முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ஊர்காவற்துறை மீனவர்களுக்கு உதவிய இந்திய அரசாங்கம்!

ஜூன் 6, 2025
இலங்கை

பாடசாலை மதில் இடிந்து வீழ்ந்ததில் மூவர் படுகாயம்

பிப்ரவரி 12, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

அதிக விலையில் அரிசி வாங்க வேண்டாம் – பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

மார்ச் 24, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

பழைய சோற்றில் உள்ள நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள் …..

ஏப்ரல் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?