நாளை முதல் மீண்டும் தன் சேவையை ஆரம்பிக்கவுள்ளது யாழ் தேவி புகையிரத நிலையம்.
இதன்படி கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வழியாக பயணிக்கும் யாழ் தேவி புகையிரதமானது திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் பயணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கான ரயில் சேவையானது செவ்வாய்,வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இயக்கப்படவுள்ளது.
இந்த ரயிலில் 04 குளிரூட்டப்பட்ட முதலாம் வகுப்பு பெட்டிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களை அறிந்துக் கொள்வதற்கு ரயில்வே திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தளத்தை பார்வையிட முடியும்
