Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

காத்தான்குடியில் போலியான அனுமதி பத்திரத்தை 8 முறை நீடித்து வைத்திருந்தவர் கைது

மே 8, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு தாழங்குடா பகுதி வீதியில் வைத்து பொலிசாரால் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை போலியாக 8 முறை நீடித்து வைத்திருந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்த 45 வயதுடைய வரை எதிர்வரும் 12ம் திகதி செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.

இது பற்றி தெரிய வருவதாவது,

கடந்த 4ம் திகதி தாழங்குடா பகுதியில் போக்குவரத்து பொலிசார் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் இதன்போது மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த கைது செய்யப்பட்டவரை நிறுத்தி சோதனை செய்தனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர் பொலிசாரால் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை காட்டியுள்ளதையடுத்து பொலிசார் சந்தேகம் கொண்டு அந்த தற்காலிக அனுமதி பத்திரத்தை சோதனையிட்டனர்.

இதன்போது குறித்த சாரதி அனுமதி பத்திரம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி யாழ் கோப்பாய் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வீதி விபத்தில் சாரதி அனுமதி பத்திரம் பொலிசாரால் கைப்பற்றி நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் கோப்பாய் பொலிசாரால் தற்காலிகமாக சாரதி அனுமதி பத்திரம் வழங்கியுள்ளனர் இதனையடுத்து சம்மாந்துறையைச் சேர்ந்த கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றி தற்போது தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தர் குறித்த தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை கோப்பாய் பொலிஸ் நிலைய இறப்பர் முத்திரையை பயன்படுத்தி 8 முறை அதனை சட்டவிரோதமாக நீடித்து கொடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த பொலிஸ் அதிகாரியின் சம்மாந்துறை வீட்டை முற்றுகையிட்ட பொலிசார் அங்கு கோப்பாய் பொலிஸ் நிலைய இறப்பர் முத்திரையை மீட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து போலி அனுமதி பத்திரம் வைத்திருந்த காத்தான்குடியை சேர்ந்த வரையும் மீட்கப்பட்ட சான்று பொருளான இறப்பர் முத்திரையுடன் கடந்த 4ம் திகதி கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அதேவேளை கோப்பாய் பொலிஸ் நிலைய இறப்பர் முத்திரையை வைத்திருந்த பொலிஸ் அதிகாரியை வரவழைத்து விசாரணையின் போது அவரின் மனைவி இந்த இறப்பர் முத்திரையை பயன்படுத்தி உள்ளதாக வாக்கு மூலத்தில் அவர் தெரிவித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி செம்மணி மனித புதைக்குழி அகழ்வில் மழை குறுக்கீடு
அடுத்த செய்தி யாழில் உணவகத்திற்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

நல்லூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தில் தீ

ஆகஸ்ட் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணியில் மேலும் 3 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்!

ஜூலை 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் டிஜிட்டல் பணம் செலுத்தும் செயலி அறிமுகம்

செப்டம்பர் 19, 2025
அண்மைய செய்திகள்உலகம்

கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஹோர்முஸ் நீரிணையை கடந்தது சீனக் கப்பல்

மார்ச் 25, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?