Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி புதைகுழிக்குள் இருந்து தொடர்ச்சியாக வெளிப்படும் குழந்தைகளின் என்பு கூடுகள்

மே 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து இன்றைய தினம் வியாழக்கிழமையும் குழந்தைகளின் என்பு கூடுகளுடன் நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 10ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அதன் போது, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த என்பு கூடுகளில் இரண்டு என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், நான்கு என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு , அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் இதுவரையான காலப்பகுதியில் செம்மணி மனித புதைகுழியில், 259 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 254 மனித என்பு கூட்டு தொகுதி முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை , புதைகுழிக்குள் இருந்து கடந்த சில தினங்களில் மீட்கப்பட்ட , மூக்குத்தி போன்றதான ஆபரணங்கள் , நாணய குற்றிகள் உள்ளிட்ட பிற பொருட்களான 14 பொருட்கள் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓரிரு நாட்களாக புதைகுழிக்குள் இருந்து குழந்தைகளின் என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டு வருவதுடன் அவை அகழ்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை நேற்றைய தினம் புதன்கிழமை அடையாளம் காணப்பட்ட என்பு கூடு ஒன்றின் மண்டையோட்டு பகுதி மாத்திரமே வெளி தெரியும் வகையில் உள்ள நிலையில், ஏனைய பாகங்கள் மயானத்தின் தகன மேடை கட்டுமானத்திற்குள் காணப்படுவதனால் , அதனை இலக்கமிடவில்லை எனவும் , முழுமையான என்பு கூட்டு தொகுதியையே இலக்கமிட்டு வருவதானால், தகன மேடை உடைக்கப்பட்டு , முழுமையான என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்ட பின்னரே அதற்கு இலக்குமிடப்படும் என சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி மன்னாரில் மணல் அகழ்வு மற்றும் விலை நிர்ணயம் தொடர்பான கூட்டம் இழுபறியில் முடிவு
அடுத்த செய்தி மட்டு நகர் வாவியில் சடலமாக மீட்க்கப்பட்ட இரு ஆண்கள் – பெரும் பரபரப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்சினிமா

தேரே இஷ்க் மெய்ன் திரைப்படத்தில் விமானப்படை அதிகாரியாக நடிகர் தனுஷ்!

ஜூன் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் கண்டெடுக்கப்பட்ட மோட்டார் குண்டு

பிப்ரவரி 8, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் சிறைச்சாலையில் கைதியின் மரணத்தைத் தொடர்ந்து சிறைச்சாலைப் பணியாளர்கள் தொழிற்சங்கம் அவசரப் போராட்டம்!

ஜூன் 8, 2026
இலங்கை

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் பதிவு!

செப்டம்பர் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?