ஹப்புத்தளை பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில், குடிநீர் பாட்டிலை அதன் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விட அதிக விலைக்கு விற்பனை செய்தமைக்காக அந்த நிறுவனத்திற்கு 10 இலட்சம் ரூபாய் (1 மில்லியன்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கியது. பதுளை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள், ஹப்புத்தளை – வெலிமடை வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான குறித்த உணவகத்தில் மேற்கொண்ட சோதனையின் போதே இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது.
பொதுமக்களைச் சுரண்டும் வகையில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த பாரிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
