அமெரிக்காவினால் கியூபா மீது போடப்பட்ட மிகப்பெரிய பொருளாதார தடையை நீக்கக்கோரி இலங்கை பூராவும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இன்றையதினம் வவுனியா, இலுப்பையடியில் குறித்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தினை கியூபாவை பாதுகாப்போம் என்ற இயக்கம் மற்றும் சமூக வெகுஜன அமைப்பும் இணைந்து குறித்த போராட்டத்தை ஒழுங்குபடுத்தியிருந்தது.
இதன்போது துண்டு பிரசுரங்களை மக்களிற்கு வழங்கப்பட்டதுடன், பொதுமக்கள் பலரும் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு கையொப்பமிட்டதனை அவதானிக்க கூடியதாக இருந்தது.
