மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்ற நிலை காரணமாக எரிபொருளுக்கான கேள்வி அதிகரித்தது.
இவ்வாறான ஒரு நிலையில் இந்திய அரசாங்கம் இலங்கைக்கு எரிபொருள் கப்பலொன்றை அனுப்பி வைத்துள்ளது.
குறித்த எரிபொருள் கப்பல் 38,000 மெட்ரிக் தொன் எரிபொருளோடு நேற்று கொழும்பை வந்தடைந்ததுடன், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பிரதமர் மோடிக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
