மொன்றியலின் மேற்கு தீவு (West Island) பகுதியில் அமைந்துள்ள ஆற்றில், உறைந்திருந்த பனிக்கட்டி உடைந்தமையால், உள்ளே விழுந்த இரு இளைஞர்களில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
காணாமல் போன மற்றோரு இளைஞரைத் தேடும் பணியில் பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
‘இல்-பிசார்ட்’ (Île-Bizard) மற்றும் மொன்றியல் தீவை இணைக்கும் பாலத்திற்கு அருகிலுள்ள பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையின்படி, ஆற்றில் உறைந்திருந்த பனிக்கட்டி மீது அந்த இளைஞர்கள் நடந்த சென்ற போது, எதிர்பாராதவிதமாக பனி உடைந்து இருவரும் நீருக்குள் மூழ்கியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
ஆற்று நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டாவது இளைஞரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
