Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

ரவி சவுகானை நாடு கடத்தும் உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்த அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி

மார்ச் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலில் வசிக்கும் இந்திய வம்சாவளித் தந்தை மற்றும் அவரது ஐந்து வயது மகனை நாடு கடத்தும் முடிவை, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.

இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்படவிருந்த நிலையில், அமைச்சரின் இந்த உத்தரவு அந்தப் பிள்ளையையும் அவனது தந்தையையும் தாயிடமிருந்து பிரிப்பதைத் தடுத்துள்ளது.

ரவி சவுகான் (Ravi Chauhan) மற்றும் அவரது மகன் ஆகியோரை நாடு கடத்தும் உத்தரவு தற்போது ஒரு மாத காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ரவி சவுகான் மற்றும் அவரது மனைவி, குழந்தையுடன் 2023-ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து வெளியேறி கனடாவிற்கு வந்தனர்.

இதில் ரவியின் மனைவிக்கு மட்டும் ‘அகதி அந்தஸ்து’ (Protected Person) வழங்கப்பட்டது.

ஆனால், ரவி மற்றும் அவரது மகனை நாடு கடத்த வேண்டுமென, கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகவரகம் அண்மையில் உத்தரவிட்டது.

இந்த நிலையிலேயே, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) தலையிட்டு, அந்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள அவர்களின் வழக்கறிஞர் ஸ்டீவர்ட் இஸ்ட்வான்ஃபி, “இந்தக் குடும்பத்தைச் சிதைக்காமல் இருக்க அமைச்சர் எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார்.

இந்த ஒரு மாத கால அவகாசம், அவர்களின் வழக்கில் உள்ள தவறுகளைச் சரிசெய்யவும், அவர்கள் கனடாவிலேயே தங்குவதற்கான சட்ட வழிகளை ஆராயவும் உதவும் எனவும் வழக்கறிஞர் ஸ்டீவர்ட் இஸ்ட்வான்ஃபி தெரிவித்தார்.

முந்தைய செய்தி மொன்றியலில் உள்ள சமூக சேவை அமைப்புகள் தங்கள் சேவைகளைக் குறைக்க தீர்மானம்
அடுத்த செய்தி கச்சதீவில் புதுப்பொலிவுடன் புனித அந்தோனியார்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

பிரிட்டிஷ் ராஜமுத்திரையான கிரீடத்தை’ (Crown) நீக்க மாகாண அரசு முடிவு

ஜனவரி 26, 2026
கியூபெக்முதன்மை செய்தி

நெடுஞ்சாலை 520 இணையும் பகுதி முழுமையாக மூடப்படுகின்றது

ஏப்ரல் 17, 2026
கியூபெக்

மொண்ட்ரியல் துப்பாக்கிச் சூடு விவகாரம் – 19 வயது சந்தேகநபர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு!

மார்ச் 5, 2026
கியூபெக்முதன்மை செய்தி

லவால் பகுதியில் 30 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

ஜனவரி 7, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?