Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழில். புகையிரத கடவைக்காக நீண்ட காலமாக தொடரும் போராட்டம்

மார்ச் 22, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் மூடப்பட்ட புகையிரத கடவையை மீள திறக்க கோரி அப்பகுதியில் வசிப்போர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் நீராவியடி பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக செல்லும் வீதியில் புகையிரத கடவை ஒன்று அமைந்திருந்தது.

குறித்த கடவை 1990ஆம் ஆண்டிற்கு முன்பாக புகையிரத பாதையில் காணப்பட்டமைக்கான குறிப்புக்கள் , வரைபடங்கள் இல்லாத காரணத்தால் , புகையிரத பாதையில் அப்பகுதியில் கடவை அமைக்க முடியாது என புகையிரத திணைக்களம் மறுத்து வந்தது.

இருந்த போதிலும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் குறித்த இடத்தில் புகையிரத கடவை முன்னர் இருந்ததாகவும் , அதன் அடிப்படையில் கடவை அமைக்கப்பட வேண்டும் என கோரி கடவை அமைத்து பயணித்து வந்தனர்.

இந்நிலையில் குறித்த கடவை பாதுகாப்பற்ற கடவையாக காணப்பட்டமையால் , 2018 ஆம் ஆண்டு பாதுகாப்பு கடவையாக மாற்ற அப்பகுதி மக்கள் சிலர் இணைந்து முயற்சித்தனர்.

அதேநேரம் குறித்த பகுதியில் புகையிரத கடவை அமைக்க வேண்டும் என கோரி யாழ். மாநகர சபையில் 2018 ஆம் ஆண்டு பிரேரணை கொண்டு வரப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அது தொடர்பில் புகையிரத திணைக்களத்துடன் நேரில் சென்று கோரிக்கைகள் முன் வைக்கப்பட்ட போதிலும் அவர்கள் தொடர்ந்து அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தனர்.

அதேநேரம் கடவைக்கு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாட்டையும் புகையிரத திணைக்கள அதிகாரிகள் , பொலிசார் ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் அவை அகற்றப்பட்டன.

இவ்வாறாக தொடர்ந்து பல வருடங்களாக குறித்த பகுதியில் கடவை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன் வைத்து வரப்பட்ட நிலையில் , அண்மையில் புகையிரத திணைக்கள அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் புகையிரத பாதையில் அமைக்கப்பட்டிருந்த கடவை முற்றாக அகற்றப்பட்டு , குறித்த பகுதி ஊடாக வாகனங்கள் செல்ல முடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை கடவை அகற்றப்பட்ட பகுதிக்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் , புகையிரத திணைக்களத்துடன் பேசி பாதுகாப்பான நிரந்தர கடவை அமைத்து தர நடவடிக்கை எடுப்பேன் என அப்பகுதி மக்களுக்கு உறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில் , தமக்கு அப்பகுதியில் பாதுகாப்பான நிரந்தர புகையிரத கடவை அமைத்து தர வேண்டும் என கோரி ஏனைய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் , அதிகாரிகள் உள்ளிட்டவர்களின் கவனத்தை ஈர்க்கும் முகமாக அப்பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

முந்தைய செய்தி சொகுசு பேருந்தில் பயணம் செய்த நபர் திடீர் மரணம்
அடுத்த செய்தி விரிவுரையாளரின் இறுதி நிகழ்வை படமாக்க தடை விதித்த சுமந்திரன்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

துணுக்காய் தென்னியன்குளத்தில் பிரமாண்ட பொங்கல் விழா

ஜனவரி 30, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

அரச வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு

பிப்ரவரி 21, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

சிலாபம் – வெல்ல பகுதியில் மாயமான இரு மீனவர்கள்

ஜனவரி 19, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மக்களை ஒடுக்கும் சட்ட முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டும்

பிப்ரவரி 28, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?