Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

60 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுடன் தாதியர் பயற்சி

மார்ச் 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பயிற்சி காலத்தில் மாதம் ரூ. 60,000 கொடுப்பனவும் சீருடை கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது அதனால், பொருளாதார சுமை இன்றி மாணவர்கள் எளிதாக பயிற்சியை நிறைவு செய்ய முடிகின்றது. அத்துடன் பயிற்சி முடிந்ததும் உடனடி தொழில் வாய்ப்பு கிடைப்பதால், நிலையான சேவை வாழ்க்கை உறுதி செய்யப்படுகிறது.

எனவே வடக்கு மாகாணத்தில் உயர்தரப் பரீட்சை எழுதி எதிர்கால தொழில் வாய்ப்பை எதிர்நோக்கும் மாணவர்கள், வரவிருக்கும் தாதியர் உள்ளீர்ப்பில் தயக்கமின்றி விண்ணப்பிக்க வேண்டும் என யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலை தாதிய பயிற்சி கல்லூரியில் தாதியர்களுக்கான பயிற்சி ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

சுகாதார அமைச்சு கடந்த ஆண்டு ஆவணி மாதத்தில் சுமார் 3000 தாதியர்களை உள்ளீர்ப்பதற்கான நேர்முகத் தேர்வுகளை ஆரம்பித்திருந்தது. அதன் விளைவாக, இவ்வாரம் அவர்கள் பயிற்சிக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை முழுவதும் உள்ள 16 தாதியர் பயிற்சி கல்லூரிகளில் இப்பயிற்சிகள் ஆரம்பமாகின்றன. வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தாதியர் பயிற்சி கல்லூரியும் வவுனியா தாதியர் பயிற்சி கல்லூரியும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பயிற்சிகளை வழங்குகின்றன.

யாழ் போதனா வைத்தியசாலை தாதியர் பயிற்சிக்காக 100 பயிற்சியாளர்கள் இணைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தப் பயிற்சியை 2029 ஆம் ஆண்டில் நிறைவு செய்தவுடன், உடனடி நியமனம் வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் தற்போது பணிபுரியும் தாதியர்களில் சுமார் 50% பேர் இலங்கையின் பிற மாகாணங்களில் இருந்து வந்தவர்கள். அவர்கள் தங்கள் முதல் நியமனத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றி பின்னர் மாற்றம் பெறுகின்றனர்.

இதனால், பல வைத்தியசாலைகளில் அனுபவமிக்க (சிரேஷ்ட) தாதியர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

வடக்கில் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் தாதியர் பயிற்சியைத் தேர்வு செய்து தொழிலில் நுழைவது மிகவும் இலகுவானதும் பயனுள்ளதுமான ஒரு வாய்ப்பாகும் என கூறினார்.

முந்தைய செய்தி யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட விரிவுரையாளரின் பூதவுடல்
அடுத்த செய்தி யாழ். இரத்த வங்கிக்கு குருதி வழங்கிய 185 இராணுவத்தினர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு…

மார்ச் 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி பகுதியில் இன்று புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்!

ஆகஸ்ட் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜூலை 6, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ். குருநகரில் துருப்பிடித்த துப்பாக்கி மீட்பு…

ஏப்ரல் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?