கியூபெக் மாகாணத்தின் 2026-2027 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், பெட்ரோல் விலை உயர்வினால் தவிக்கும் வாகன ஓட்டிகளுக்கு எவ்வித வரிச் சலுகையும் வழங்கப்பட மாட்டாது என்று நிதியமைச்சர் எரிக் ஜிரார்ட் (Eric Girard) அதிரடியாக அறிவித்துள்ளார்.
12.4 பில்லியன் டொலர் நிதிப் பற்றாக்குறையில் மாகாணம் இருந்தாலும், சில துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் கல்வி முதலியன கியூபெக் அரசின் மிக முக்கியமான கடமைகளாகக் கருதப்பட்டு, அவற்றுக்குத் தேவையான நிதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
கியூபெக் மாகாணத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் வீதிகளைப் புனரமைக்கப் பல பில்லியன் டொலர்கள் இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், குடும்ப வன்முறை மற்றும் வீடற்றோர் பிரச்சினைகளைத் தீர்க்கச் சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடனான வர்த்தகச் சிக்கல்கள் மற்றும் உலகளாவிய போர்ச் சூழல் காரணமாகக் கியூபெக் பொருளாதாரம் 2026-ஆம் ஆண்டில் வெறும் 1% மட்டுமே வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
