Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வவுனியா நெல் கொள்வனவு தொடர்பில் விவசாயிகள் முறைப்பாடு

மார்ச் 18, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு சொந்தமான களஞ்சியசாலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனம் செய்வதில் பல்வேறு இடர்பாடுகளும் முறைகேடுகளும் இடம்பெறுவதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனுக்கு முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து குறித்த இடத்துக்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் நிலைமைகளை ஆராய்ந்தார்.

இந்நிலையில் குறித்த களஞ்சியசாலையின் முகாமையாளரின் செயற்பாடுகள் விவசாயிகள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் முறையற்ற விதத்தில் ஒரு திட்டமிடப்படாத வகையிலும் விவசாயிகளிடம் நெல்லை கொள்வனவு செய்வது மற்றும் நீண்ட நாட்கள் விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றமை இடைத்தரகர்களான வர்த்தகர்கள் நெல் ஆலை உரிமையாளர்கள் நெல்லை குறித்த களஞ்சிய சாலைக்கு வழங்குவது தொடர்பிலும் விவசாயிகளால் முறையிடப்பட்ட நிலையில் அவை தொடர்பிலும் கவனமெடுத்து பார்வையிட்டிருந்தார்.

இதனை அடுத்து மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் குறித்த இடத்துக்கு வருகை தந்ததோடு கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கமும் அங்கு வருகை தந்திருந்தார்.

இதன்போது உபாலி சமரசிங்க குறித்த களஞ்சியசாலையின் முகாமையாளருக்கு கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்ததோடு விவசாயிகளின் நலன் கருதி செயல்பட வேண்டும் எனவும் மக்களுக்கான அரசாங்கத்தில் மக்களுக்கான செயற்பாடுகளே முன்னுரிமை படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை விவசாயிகளுடைய நெல்லை கால தாமதமாக்கியும் வர்த்தகர்களுடைய நெல்லை களஞ்சியப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெறுமாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து இருந்தார்.

இந்நிலையில் குறித்த களஞ்சிய சாலையில் இடப்பற்றாக்குறை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து வவுனியாவில் மேலும் களஞ்சிய சாலை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் பிரகாரம் வவுனியா நகர் பகுதியை அண்டி 2 களஞ்சியசாலைகளும் மடுக்கந்தை பகுதியில் ஒரு களஞ்சியசாலையுமாக பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோர் நேரடியாக சென்று பார்வையிட்டு ஒழுங்குகளை செய்திருந்தனர்.

இதேவேளை தொடர்ந்தும் விவசாயிகளுடைய நெல்லை கொள்வனவு செய்வதில் காலதாமதமும் அசண்டையீனமும் காணப்படுமாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விவசாயிகள் அவ்வாறான நிலைமைகளுக்கு முகம் கொடுத்தால் முறைப்பாடு செய்யுமாறும் பிரதி அமைச்சரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முந்தைய செய்தி யாழில்.இளம் சட்டத்தரணி மரணம்
அடுத்த செய்தி 2026-2027 நிதியாண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் Eric Girard தாக்கல் செய்தார்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

டிசம்பர் 9, 2025
இலங்கை

பாலைப்பெருமாள்கட்டு கிராம அலுவலர் பிரிவில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வு

ஜனவரி 28, 2026
இலங்கை

புதுக்குடியிருப்பில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச மகளிர் தினம் 2026

மார்ச் 12, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் போதைப்பொருள் வியாபாரம் – பெண் உள்ளிட்ட இருவர் கைது

மார்ச் 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?