Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் மாவட்டத்தில் சகலருக்கும் எரிபொருள் வழங்க நடவடிக்கை – பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க

மார்ச் 17, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் எரி பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் தடையின்றி சகலருக்கும் எரிபொருளை வழங்க விசேட பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டு , குறிப்பாக விவசாயம் மற்றும் மீனவர்களுக்கு தடையின்றி எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பாக விசேட கலந்துரையாடல் இன்று செவ்வாய்(17) காலை மாவட்டச் செயலகத்தில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மனோகரன் பிரதிப் ஏற்பாட்டில் பிரதி அமைச்சர் உபாலி அமரசிங்க தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் ,பிரதேச செயலாளர்கள்,உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், திணைக்களத் தலைவர்கள் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மற்றும் அரச நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் எரி பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் தடையின்றி சகலருக்கும் எரிபொருளை வழங்க விசேட கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.

தற்போது மன்னார் பகுதியில் மீன்பிடி பருவகாலம் ஆரம்பித்துள்ளதால், மீனவர்களுக்கு தேவையான எரிபொருளை தடையின்றி வழங்குவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இதற்காக விசேட பொறிமுறை ஒன்று மீன்பிடி அதிகாரிகளால் உருவாக்கப்பட்டுள்ளது, பெரும்போக அறுவடை பணிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதால், விவசாயிகளுக்குத் தேவையான எரிபொருளை விவசாயப் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகளின் மேற்பார்வையில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.

பொலிஸ் நிலையங்கள், வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களுக்கு தட்டுப்பாடின்றி எரிபொருளை வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்.இந்தியாவிலிருந்து அண்மையில் ஒரு எரிபொருள் கப்பல் வந்துள்ளதால், எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நான்கு கப்பல்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.கடந்த காலங்களில் எரிபொருள் விநியோகத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் அரசியல் தலையீடுகள் தவிர்க்க இம்முறை கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விநியோக நடவடிக்கைகளைச் சரியாக முன்னெடுக்க பொலிஸார் மற்றும் அரச அதிகாரிகள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவர்.மன்னார் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்படையாமல் கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டது. என பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி யாழில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி
அடுத்த செய்தி 1.8 சதவீதமாகக் குறைந்துள்ள கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

பாராளுமன்ற நிர்வாக பணிப்பாளராக மப்ருக் மர்சூக் தெரிவு!

செப்டம்பர் 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா மாநகர சபை முன்னாள் மேயர் உட்பட நால்வரை கைது செய்ய உத்தரவு

ஜூலை 1, 2026
1
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழ்த் தேசியத் தரப்புகள் சங்குச் சின்னத்தில் இறங்கத் தீர்மானம்.

பிப்ரவரி 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வாழைச்சேனையில் வெள்ளத்தில் சிக்கிய 16 விவசாயிகள்

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?