Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மறைந்த தோழர் நல்லகண்ணுவை நினைவு கூரல் – ஈழத்தில் மக்கள் திரண்டு அஞ்சலி

மார்ச் 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அண்மையில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் வாழ்நாள் போராளியுமான தோழர் இரா. நல்லகண்ணு அவர்களை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வுகள் 15.03.2025 ஞாயிற்றுக் கிழமை மாலை 3.30 மணிக்கு இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.

தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் மற்றும் தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் முதலாவதாக தோழர் நல்லகண்ணு அவர்களை நினைவுகூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

அதனை தொடர்ந்து தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும், முன்னாள் வடமாகாணசபையின் விவசாய அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் அவர்களின் தலைமை உரையினை தொடர்ந்து, ஆசிரியம் சஞ்சிகையின் ஆசிரியரும், சமூக செயற்பாட்டாளருமான தெ. மதுசூதனன் அவர்களின் சிறப்புரையும், அதனைத் தொடர்ந்து அரசியல் ஆய்வாளர் ம. நிலாந்தனின் உரையும், தொடர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செ. கஜேந்திரன் அவர்களின் உரையும் இடம்பெற்றது.

தோழர் நல்லகண்ணு அவர்கள் ஈழத்தமிழ் மக்கள் மீதான பற்று, பிரித்தானிய காலனியாதிக்கத்துக்கு எதிராக போராடியமை, வாழ்நாள் முழுவதும் பொதுவுடமைப் போராளியாக செயற்பட்டமை, விவசாயிகளுக்கு ஆதரவாக எப்போதும் களத்தில் நின்றமை, சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு ஆதரவாகவும், கனிம வளக் கொள்ளைகளுக்கு எதிராகவும் மக்களோடு நின்று துணிச்சலாக போராடியமை, அவரது எளிமையும், உண்மையும் போன்ற பல்வேறு விடயங்களையும் பேச்சாளர்கள் தங்களது பேச்சுக்களில் வெளிக்கொணர்ந்திருந்தனர்.

தோழர் நல்லகண்ணு அவர்களை நினைவு கூர்ந்த ஈழத்தின் முதலாவது நிகழ்வு இதுவாகும்.

முந்தைய செய்தி வவுனியா தாதியர் பயிற்சிக்கல்லூரிக்கு பா.உ .சத்தியலிங்கம் விஜயம்
அடுத்த செய்தி இராணுவத்தினர் வசமிருந்த வட்டக்கச்சி விவசாய பயிற்சி நிலையத்திற்குரிய 07ஏக்கர் காணி விடுவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

ஆளுநர் அலுவலகம் வரை சென்ற பட்டதாரிகள்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்உலகம்

கொலம்பியாவில் நிலநடுக்கம்!

ஜூன் 8, 2025
இலங்கை

தீவகத்திற்கான போக்குவரத்து வழமைக்கு!

டிசம்பர் 1, 2025
அண்மைய செய்திகள்உலகம்

மொசாம்பிக் சிறைச்சாலையில் 33 பேர் உயிரிழப்பு!

டிசம்பர் 26, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?