Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

செங்கலடியில் உணவக உரிமையாளருக்கு 70 ஆயிரம் அபராதம்

மார்ச் 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

செங்கலடி பிரதேசத்தில் மனித பாவனைக்கு உதவாத வண்டுகள் நிறைந்த உணவுப் பொருட்களைக் கொண்டு உணவு தயாரிப்பில் ஈடுபட்ட உணவகம் ஒன்றின் உரிமையாளரை அபராதமாக 70 ஆயிரம் ரூபாவை செலுத்துமாறும் உணவகத்தை தற்காலிகமாக மூடுமாறு ஏறாவூர் நீதவான் நீதிமன்றம் கடந்த 96) திகதி வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்து கட்டளையிட்டது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.முரளீஸ்வரனின் வழிகாட்டலில், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தவேந்திரராஜா, அமுதமாலன், மனோகரன், ஹிசாந்தராஜா ஆகியோர் இணைந்து செங்கலடி பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகங்களைச் சோதனையிட்டனர்.

இந்தச் சோதனையின் போது குறித்த உணவகத்தில் உணவு தயாரிப்பதற்காக களஞ்சியப்படுத்தி வைத்திருந்த உணவு பொருட்களான கோதுமை மா, வடைப்பருப்பு, மைசூர் பருப்பு மற்றும் கடலை ஆகியவற்றில் பெருமளவிலான வண்டுகள் காணப்பட்டதுடன் உணவகத்தின் கழிவுநீர் முறையான வடிகால் வசதியின்றி திறந்த வெளியில் வெளியேற்றப்பட்டுள்ளதை கண்டறிந்தனர்.

இதனையடுத்து குறித்த உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தவேந்திரராஜாவினால் ஏறாவூர் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் குறித்த உரிமையாளரை தண்டப்பணமாக 70 ஆயிரம் ரூபாவை செலுத்துமாறும் உணவகத்தை திருத்த வேலைகளைச் செய்து முடிக்கும் வரை தற்காலிகமாக மூடுமாறும் கைப்பற்றப்பட்ட வண்டுகள் நிறைந்த பெருமளவிலான உணவுப் பொருட்களை உடனடியாக அழிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

முந்தைய செய்தி போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது!
அடுத்த செய்தி மருதங்கேணியில் நகை திருட்டு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

முத்துஐயன்கட்டு இளைஞன் உயிரிழந்த சம்பவம் -கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை!

ஆகஸ்ட் 26, 2025
இலங்கை

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் 3 பேர் கைது!

நவம்பர் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா மாநகர சபை வழக்கில் இடைக்கால தடையை பிறப்பித்த உயர் நீதிமன்றம்

ஜூன் 2, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் – யாழ்ப்பாணம் வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது,பயணங்களை தவிர்க்குமாறு கோரிக்கை!

நவம்பர் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?