ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முக்கிய விடயத்தை அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றமையால் தன்னுடைய சேவையை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
இதன்படி ஈரான், குவைட், கட்டார் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளுக்கான விமான சேவையை சர்வதேச வானூர்தி நிறுவனங்கள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
மேலும் பயணிகள் தங்களுடைய பயணங்களை ஆரம்பிக்கும் முன் விமானங்களை உறுதி செய்து கொள்ளுமாறு விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
