இந்தியாவின் கொல்கத்தா மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் இன்று சக்தி வாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நில அதிர்வு 5.5 ரிக்டர் அளவுக் கோளில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொல்கத்தாவில் கடந்த 3 ஆம் திகதியும் நில அதிர்வு பதிவாகியிருந்ததுடன், இன்று ஏற்பட்ட அதிர்வால் எவ்வித உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
