பின்லாந்தில் தற்போது மோசமான வானிலை நிலவுவதால் அங்கு விமானம் ஒன்று தரையிறங்கும் போது விபத்தை சந்தித்துள்ளது.
150 பேரோடு பயணித்த வணிக விமானமே இந்த விபத்தை நேற்றையதினம் எதிர்க் கொண்டுள்ளது.
இந்த விமானமானது பின்லாந்தின் லாப்லண்ட் பகுதியிலுள்ள கிட்டிலா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது தவறி விழும் நிலைக்கு சென்றதாக பின்லாந்து விமான நிலைய பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலிருந்து பயணித்த விமானமே இந்த நிலையை எதிர்கொண்டுள்ளது.
அதிக பனிப்பொழிவினால் இந்நிலை ஏற்பட்டதாகவும், பயணிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் பனிபொழிவினால் மற்றுமொரு விமானமும் விபத்தில் சிக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


